For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Pro Kabaddi 2024 - குஜராத் அணி அபார வெற்றி.. ஜெய்ப்பூர் அணியும் வென்றது.. பெங்களூர் வீரர் சாதனை

ஐதராபாத் : புரோ கபடி 2024 ஆம் ஆண்டு சீசனில் ஐந்தாவது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் இன்று மாலை நடைபெற்றது. பெங்கால் அணியும் ஜெய்ப்பூர் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் இரண்டு அணிகளும் ஆரம்பத்திலிருந்து அபாரமாக விளையாடி புள்ளிகளை பெற்றது.

இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை பெற்ற நிலையில் ஆட்டத்தின் முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 21 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருக்க பெங்கால் அணி 18 புள்ளிகளை பெற்றிருந்தது.

pkl 2024 pro kabaddi 2024 2024

இரண்டாவது பாதியில் பெங்களூர் அணி புள்ளிகளை வரிசையாக பெற்ற நிலையில் ஃபேஷல் சூப்பர் டேக்கல் செய்து பெங்கால் அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார்.ஆனால் ஜெய்ப்பூர் அணி பெங்கால் அணியை ஆல் அவுட் செய்தது. இறுதியில் பெங்கால் அணி எவ்வளவு போராடியும் ஜெய்ப்பூர் அணி அருகே வர முடியவில்லை.

இதன் மூலம் இறுதியில் ஜெய்ப்பூர் அணி 39 புள்ளிகளும் பெங்கால் அணி 34 புள்ளிகளும் பெற்று ஜெய்ப்பூர் வெற்றியை பதிவு செய்தது. இதனை அடுத்து பெங்களூர் அணியும் குஜராத் அணியும் பல பரிட்சை நடத்தியது.
இதில் இரு அணிகளுமே கடுமையாக போராடி சரிசமமாக இருந்து வந்தனர்.

குறிப்பாக பெங்களூர் அணி குஜராத்தை ஆல் அவுட் செய்தது. அப்போது பெங்களூர் வீரர் பரதீப் நார்வால் புரோ கபடி வரலாற்றில் 1700 ரைடு புள்ளிகளைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அப்போது பெங்களூர் அணி 12க்கு 17 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது குஜராத் அணியும் சில புள்ளிகளை பெற்றது.

இதனால் ஆட்டத்தின் முதல் பகுதியில் குஜராத் 16 புள்ளிகளும் பெங்களூரு 19 புள்ளிகள் பெற்று இருந்தது.இதை அடுத்து சுதாரித்துக் கொண்டு விளையாடிய குஜராத் அணி அடுத்தடுத்து ரெய்டுகளில் புள்ளிகளை வென்றது. இதன் மூலம் பெங்களுர் அணி ஆல் அவுட் ஆனது. இறுதியில் பெங்களூர் அணி எவ்வளவு போராடியும் குஜராத் அருகில் வர முடியவில்லை. இதனால் குஜராத் அணி 36க்கு 32 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை பெற்றது.

Story first published: Sunday, October 20, 2024, 23:59 [IST]
Other articles published on Oct 20, 2024
English summary
Pro Kabaddi 2024 - Yesterday Match result Gujarat and Jaipur won their game Pro Kabaddi 2024 - குஜராத் அணி அபார வெற்றி.. ஜெய்ப்பூர் அணியும் வென்றது.. பெங்களூர் வீரர் சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+