For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோ கபடி லீக் 2025 புள்ளி பட்டியல்.. முதல் 8 இடங்களை பிடித்த அணி.. தமிழ் தலைவாஸ்க்கு எந்த இடம்

புரோ கபடி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் 18 போட்டிகளில் பங்குபெறும். இதில் முதல் எட்டு இடங்கள் பிடிக்கும் அணிக்கு மட்டும்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடித்திருக்கும் அணி எதுவென்று தற்போது பார்க்கலாம். முதலிடத்தில் புனே அணி 26 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டெல்லி அணி 26 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

PKL

இதில் புனே அணி 18 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டது. டெல்லி அணி 17 போட்டியில் மட்டும் தான் விளையாடி இருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகள் மூன்றாம் இடத்திலும், பெங்களூரு அணி 18 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. மும்பை அணி 18 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஹரியானா அணி 16 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், ஜெய்ப்பூர் அணி 16 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளது.

குஜராத் அணி 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், பாட்னா அணி 12 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் உபி யுத்தாஸ் அணி 12 புள்ளிகளுடன் 11வது இடத்திலும் பெங்கால் வாரியர்ஸ் அணி 10 புள்ளிகளுடன் 12வது இடத்தில உள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 21ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ், அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மற்ற அணிகளும் தோல்வியை தழுவினால் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தை பிடிக்க முடியும். இல்லையென்றால் தொடரை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

Story first published: Monday, October 20, 2025, 23:57 [IST]
Other articles published on Oct 20, 2025
English summary
Pro kabaddi 2025 Points table Full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+