டெல்லி: புரோ கபடி லீக் தொடரில் இன்று ஒரே நாளில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியும் பாட்னா பைரேட்ஸ் அணியில் பலப் பரீட்சை நடத்தியது.
இதில் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 32 புள்ளிகள் பெற்று சமநிலை அடைந்தது. அதன் பின்பு வெற்றியாளர்களை தீர்மானிக்க நடைபெற்ற டை பிரேக்கரில் 6 க்கு 5 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்றது.

இதனை அடுத்து நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ், மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் மும்பை அணி 33 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து 90 வது லீக் ஆட்டத்தில் உபி அணியும் ஹரியானா அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ஹரியானா ஸ்டீல் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் வென்றது.
இதில் புனே அணி 26 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் டெல்லி அணி 24 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பெங்களூர் புல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் ஹரியானா ஸ்டீல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் மும்பை அணி 16 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும் குஜராத் ஜெயின்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் தமிழ் தலைவாஸ் அணி 12 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும் உள்ளது.
முதல் 8 இடங்கள் பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழ் தலைவாஸ் அணிக்கு இரண்டு ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும் எஞ்சி இருக்கும். இதில் ஒரு போட்டி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணியுடன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டி வெள்ளிக்கிழமை அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறுகிறது.