புரோ கபடி லீக் அடுத்த சீசன் அக்டோபரில் துவங்குகிறது
மும்பை: புரோ கபடி லீக் 5வது சீசன் முடிந்துள்ள நிலையில், 6வது சீசன் இந்தாண்டு அக்டோபர் 19ம் தேதி துவங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் 5வது சீசன் கடந்த ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நடந்தது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற அந்த சீசனில், 13 வாரங்களில், 138 போட்டிகள் நாடு முழுவதும் நடந்தது. இதில் பைனில் குஜராத் பார்ச்சூன் ஜயன்ட்ஸ் அணியை வென்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது பட்னா பைரேட்ஸ் அணி.

தேசிய மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் புரோ கபடி லீக்கின் 6வது சீசன், இந்தாண்டு அக்டோபர் 19ல் துவங்குகிறது. இந்த ஆண்டும் 13 வாரங்களுக்கு போட்டி நடக்க உள்ளது. 7வது சீசன், 2019 ஜூலை 19ல் துவங்கும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டிக்கு வீரர்கள் தயாராகும் வகையில் முன்னதாகவே கால் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Story first published: Monday, January 22, 2018, 13:55 [IST]
Other articles published on Jan 22, 2018


Click it and Unblock the Notifications