For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோ கபடி: பெங்காலை தோற்கடித்தது பெங்களூரு புல்ஸ்

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 20-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்துள்ளது.

By Devarajan

நாக்பூர் : 5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 20-வது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியைத் தோற்கடித்து மூன்றாவது வெற்றியைப் பெற்றுள்ளது.

இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 3-ம் வெற்றியைப் பெற்றுள்ள பெங்களூரு அணி 19 புள்ளிகளுடன் பி - பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கும் பெங்கால் அணிக்கு இது முதல் தோல்வியாகும். அந்த அணி 11 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் உள்ளது.

 Pro Kabaddi League 2017: Bengaluru Bulls Register Comfortable Win Over Bengal Warriors

நாக்பூரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் ரோஹித் குமார் முதல் புள்ளியைக் கைப்பற்ற, பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் புள்ளியைப் பெறுவதற்கு 3-ம் நிமிடம் வரை காத்திருந்தது. அந்த அணியின் மணீந்தர் சிங் முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தார்.

28-ம் நிமிடத்தில் பெங்களூரு வீரர் அஜய் குமார் சூப்பர் ரைடின் மூலம் 4 புள்ளிகளைப் பெற, அதுவே திருப்புமுனையாக அமைந்தது. இதனால் பெங்களூரு அணி 20-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. 30-ஆவது நிமிடத்தில் பெங்கால் அணியை ஆல்அவுட்டாக்கிய பெங்களூரு அணி 24-18 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

கடைசிக் கட்டத்தில் பெங்கால் அணி போராடினாலும், புள்ளிகள் வித்தியாசத்தை குறைக்க முடிந்ததேயொழிய தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை. இறுதியில் பெங்களூரு வாரியர்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

இன்று நாக்பூரில் நடக்கும் ஆட்டத்தில், இரவு 8 மணிக்கு புணேரி பால்டான்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. அதே போல இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

Story first published: Thursday, August 10, 2017, 11:06 [IST]
Other articles published on Aug 10, 2017
English summary
Bengaluru Bulls defeated beat Bengal Warriors Pro Kabaddi League Season 5, at Nagpur.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+