Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கபடி லீக்.. பெங்களூரு புல்ஸ் போட்டிகள் நாக்பூருக்கு மாற்றம்.. ரசிகர்கள் ஏமாற்றம்

பெங்களூரு: 5வது புரோ கபடி லீக் போட்டிகளில், பெங்களூரு அணியின் ஆட்டங்கள் நாக்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

5-வது புரோ கபடி 'லீக்' போட்டி வருகிற 28-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. அக்டோபர் 28-ம் தேதி வரை இந்தப்போட்டி, இந்தியாவின் ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, மும்பை, கொல்கத்தா, சோனிபட், ராஞ்சி, டெல்லி, சென்னை, ஜெய்ப்பூர், புனே ஆகிய 12 நகரங்களில் நடக்கிறது.

Pro Kabaddi League 2017: Bengaluru Bulls shift their home matches to Nagpur

இந்த நிலையில், பெங்களூரு புல்ஸ் பங்கேற்கும் புரோ கபாடி போட்டிகள், நாக்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு புல்ஸ் விளையாடும் முதல் ஆட்டம், ஸ்ரீ கந்தீரவா மைதானத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது இந்த ஆட்டம், நாக்பூரில் உள்ள மான்கபூர் உள் விளையாட்டரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, பெங்களூரு புல்ஸ் பங்கேற்கும் இதர போட்டிகளும் வெளியூர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 4ம் தேதி முதல், 10ம் தேதி வரை பெங்களூருவின் பல்வேறு இடங்களில், உள்ளூர் அணியின் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், தற்போது மைதானங்கள் இடமாற்றப்பட்டுள்ளதால், உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Story first published: Friday, July 28, 2017, 10:44 [IST]
Other articles published on Jul 28, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+