For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புரோ கபடி: பெங்கால் வாரியர்ஸை சுருட்டி வீசியது புணேரி பால்டான்

பெங்கால் வாரியர்ஸ் அணியை அதிகப் புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புணேரி பால்டான் அணி அதிர்ச்சிக் கொடுத்துள்ளது.

By Devarajan

ஆமதாபாத்: அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புணேரி பால்டான் அணி, பெங்கால் அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வென்றுள்ளது.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் தற்போது நடந்து வருகிறது. இதில், ஆமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும், முதல் 10 நிமிடங்களின் முடிவில் 5-5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலை பெற்றன.

Pro Kabaddi League 2017: Puneri Paltan outclass Bengal Warriors, Gujarat Fortunegiants edge past Bengaluru Bulls

புணேரி பால்டான் வீரர் ஜிபி மோர் ரைடின் மூலம் தனது 4-ஆவது புள்ளியைப் பெற, அந்த அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு அசத்தலாக ஆடிய புணேரி பால்டான், 15-ஆவது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட்டாக்கியது. இதனால் புணேரி பால்டான் 12-5 என்ற கணக்கில் முன்னிலைக்கு வந்தது.

இதன்பிறகு 18-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெங்கால் வாரியர்ஸ், சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் புணேரி பால்டான் 17-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

அபாரமாக ஆடிய புணேரி பால்டான் 30-15 என்ற கணக்கில் முன்னிலை பெற, அப்போதே பெங்கால் அணியின் படுதோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.

இதே போல மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வென்று முன்னிலை பெற்றுள்ளது.

இன்று நடக்கும் ஆட்டங்களில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. அதே போல குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-தெலுகு டைட்டன்ஸ் அணிகள் இரவு 9 மணிக்கு மோதுகின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Story first published: Wednesday, August 16, 2017, 13:48 [IST]
Other articles published on Aug 16, 2017
English summary
Puneri Paltan outclass Bengal Warriors, Gujarat Fortunegiants won Bengaluru Bulls in Pro Kabaddi League 2017.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+