புரோ கபடி லீக் - ஹரியானா ஸ்டீலர்ஸ், டபாங் டெல்லி வெற்றி.. பரபரப்பான போட்டி முடிவுகள்
சோனிபட் : 2018 சீசன் புரோ கபடி லீகில் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டிகள் முடிவடைந்து, ஹரியானாவில் லீக் ஆட்டங்கள் துவங்கி உள்ளன.
புரோ கபடி லீகில் ஒவ்வொரு நாளும் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் அணியை தன் சொந்த ஊரில் வீழ்த்தியது. அடுத்து நடந்த போட்டியில் டபாங் டெல்லி அணி புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.

ஹரியானா முதல் பாதி ஆதிக்கம்
ஹரியானா ஸ்டீலர்ஸ் - குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ஹரியானா, முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாம் பாதியில் குஜராத் அணி சுதாரித்தது. எனினும், அந்த அணியால் வெற்றி பெறும் அளவிற்கு புள்ளிகளை பெற முடியவில்லை.

மோனு கோயாத், குல்தீப் அசத்தல்
தன் சொந்த மண்ணில் ஆடும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 32 புள்ளிகள் பெற்று 25 புள்ளிகள் பெற்ற குஜராத் அணியை வீழ்த்தியது. ஹரியானா அணியின் நட்சத்திர வீரர் மோனு கோயத் மற்றும் குல்தீப் சிங் தலா 7 ரெய்டு புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.

புனேரி முதல் பாதியில் முன்னிலை
மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் - டபாங் டெல்லி அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் நெருக்கமாக புள்ளிகளை பெற்று போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டின. புனேரி அணி 22-20 என முதல் பாதியில் முன்னிலையில் இருந்தது.

டபாங் டெல்லி வெற்றி
ஆட்டத்தின் இரண்டாம் பாதியில், டெல்லி அணி சரசரவென முன்னேறியது. கடைசி 5 நிமிடங்களில் டெல்லி அணி தொடர்ந்து முன்னிலையை தக்க வைத்து புனேரி அணியின் போராட்டத்தை வீணாக்கியது. இறுதியில் டபாங் டெல்லி அணி 41-37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications