Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது பாதி நல்லாதான் ஆடினாங்க.. முதல் பாதி தான் ஊத்திகிச்சி.. தமிழ் தலைவாஸ் பரிதாபம்

Recommended Video

தமிழ் தலைவாஸ் பரிதாபம்..இன்னைக்கு என்ன ஆகுமோ தெரியலையே.. வீடியோ

சென்னை : புரோ கபடி லீகின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.

முதல் போட்டியில் புனே பல்தான் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும், இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் - யுபி யுத்தா அணிகளும் மோதின.

இதில் புனே பல்தான் மற்றும் யுபி யுத்தா அணிகள் வெற்றி பெற்றன. இந்த போட்டிகளின் விவரங்கள் இங்கே.

நேற்றைய உற்சாகம்

நேற்றைய உற்சாகம்

தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடைபெற்ற முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணியான பாட்னா பைரேட்ஸ் அணியை பெரிய வித்தியாசத்தில் வென்று இருந்தது. அந்த உற்சாகத்துடன் இரண்டாம் நாள் போட்டிக்கு தயாரானது.

துவக்கம் மோசம்

துவக்கம் மோசம்

நேற்றைய இரண்டாம் நாள் போட்டியில் துவக்கத்தில் படுமோசமாக ஆடியது தமிழ் தலைவாஸ் அணி. யுபி யுத்தா அணி முதல் பாதியில் 18-4 என முன்னிலையில் இருந்தது. வெறும் நான்கு புள்ளிகள் மட்டுமே எடுத்து முதல் பாதியை யுபி யுத்தா அணிக்கு தாரை வார்த்தனர் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள்.

இரண்டாம் பாதி ஆதிக்கம்

இரண்டாம் பாதி ஆதிக்கம்

எனினும், இரண்டாம் பாதியில் சுதாரித்தது தமிழ் தலைவாஸ். இரண்டாம் பாதியில் ஆதிக்கம் செலுத்தி 28-19 என இரண்டாம் பாதியில் மட்டும் அதிக புள்ளிகள் எடுத்தது. எனினும், ஒட்டு மொத்த போட்டியின் முடிவில் யுபி யுத்தா அணி 37 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணி 32 புள்ளிகளும் பெற்றன. யுபி யுத்தா அணி தன் முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றது. முதல் பாதியில் கோட்டை விட்ட தமிழ் தலைவாஸ் அணி, இரண்டாம் பாதியில் தன் இயல்பான ஆதிக்கம் செலுத்தும் ஆட்டத்தை ஆடியும் தோல்வியை தழுவியது.

புனே பல்தான் வெற்றி

புனே பல்தான் வெற்றி

மற்றொரு லீக், ஆட்டத்தில் புனே பல்தான், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் புனே பல்தான் அணி துவக்கத்தில் சிறிது பின்தங்கி பின் அட்டகாசமாக ஆடத் துவங்கியது. இரண்டு ஆல் அவுட் செய்த புனே அணி இறுதியில் 34-22 என வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, October 9, 2018, 10:48 [IST]
Other articles published on Oct 9, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+