Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : முதல் பாதியில் டாப் கியரை போட்டுத் தூக்கிய பெங்கால் வாரியர்ஸ்.. ஹரியானாவை வீழ்த்தியது!

புனே : பெங்கால் வாரியர்ஸ் அணியின் மணிந்தர் சிங் அசத்தல் ரெய்டுகளால் புள்ளிகளை குவிக்க, அந்த அணி, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.

புனேவில் நடைபெற்ற 97வது புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

Pro Kabaddi League 2019 : Bengal Warriors vs Haryana Steelers 97th league match result

இந்தப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் மணிந்தர் சிங் அசத்தலாக ஆடி 18 ரெய்டு புள்ளிகளை குவித்தார். இது தான் அவரது சிறந்த புரோ கபடி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. மணிந்தர் சிங், பிரபஞ்சன், நபிபக்ஷ் ஆகிய மூவரும் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினர். ஹரியானா அணி அவர்களை தடுக்க முடியாமல் திணறியது.

முதல் பாதி முடிவில் 30 - 14 என்ற புள்ளிக் கணக்கில் பெரிய அளவில் முன்னிலை பெற்றது பெங்கால் அணி. இரண்டாம் பாதியில் விழித்துக் கொண்ட ஹரியானா அணி 22 புள்ளிகள் எடுத்தது. எனினும், மொத்தமாக 36 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது.

முதல் பாதியில் 30 புள்ளிகள் எடுத்த பெங்கால் அணி, இரண்டாம் பாதியில் 18 புள்ளிகள் எடுத்து, மொத்தமாக 48 புள்ளிகள் குவித்தது. ஆட்ட நேர முடிவில் 48 - 36 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ்.

இந்தப் போட்டியில் ஹரியானாவை மூன்று முறை ஆல் - அவுட் செய்தது பெங்கால் வாரியர்ஸ் அணி. அதுவே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Story first published: Friday, September 20, 2019, 16:09 [IST]
Other articles published on Sep 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+