Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : முட்டி மோதியும் முடியலை.. குஜராத் சோகம்.. பாதி போட்டியிலேயே சோலியை முடித்த டெல்லி!

புனே : 2019 புரோ கபடி லீக் போட்டியில் டபாங் டெல்லி அணி, குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.

புனேவில் நடைபெற்ற 91வது லீக் சுற்றுப் போட்டியில் டபாங் டெல்லி - குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியிலும் டெல்லி அணியின் நவீன் குமார் சிறப்பாக செயல்பட்டார். அவர் பத்துக்கும் மேற்பட்ட ரெய்டு புள்ளிகள் அள்ளி அசத்தினார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

முதல் பாதியில் கோட்டை விட்ட குஜராத் அணி, இரண்டாம் பாதியில் சுதாரித்து ஆடியது. எனினும், அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. இரண்டாம் பாதியில் சறுக்கினாலும், டெல்லி அணி வெற்றிக் கனியை தட்டிப் பறித்தது.

டெல்லி முன்னிலை

டெல்லி முன்னிலை

இந்தப் போட்டியின் முதல் பாதியில் நவீன் குமார் அசத்தல் ரெய்டுகளால் புள்ளிகளை அள்ளினார். ஒன்பதாவது நிமிடத்தில் குஜராத் அணியை ஆல்-அவுட் செய்தார். முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20 - 9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

குஜராத் சுதாரிப்பு

குஜராத் சுதாரிப்பு

இரண்டாம் பாதியில் துவக்கத்திலேயே மீண்டும் ஆல் - அவுட் ஆன குஜராத் அணி அதன் பின்பு சுதாரித்து ஆடியது. குஜராத் அணியின் பங்கஜ் தடுப்பாட்டத்திலும், ரோஹித் குலியா ரெய்டுகளிலும் புள்ளிகளை கவர்ந்தனர்.

டெல்லி வெற்றி

டெல்லி வெற்றி

டெல்லி அணியை ஆல் - அவுட் கூட செய்தது குஜராத், எனினும், ஆட்ட நேர முடிவில் அந்த அணியால் 30 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. 34 புள்ளிகள் எடுத்த டெல்லி அணி 34 - 30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் பாதியில் வெற்றி

முதல் பாதியில் வெற்றி

இரண்டாம் பாதியில் குஜராத் 21 புள்ளிகளும், டெல்லி 14 புள்ளிகளும் மட்டுமே எடுத்தன. இருந்தாலும், முதல் பாதியிலேயே குஜராத் அணியின் தோல்வியை உறுதி செய்தது தான் டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது..

புள்ளிப் பட்டியல்

புள்ளிப் பட்டியல்

தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் டெல்லி அணி, இந்த வெற்றியுடன் சேர்த்து தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. குஜராத் அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

Story first published: Monday, September 16, 2019, 15:16 [IST]
Other articles published on Sep 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+