For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : இரண்டாம் பாதியில் யு மும்பாவுக்கு சீனே இல்லை.. நேரடியா கிளைமாக்சை காட்டிய டபாங் டெல்லி!

டெல்லி : டெல்லி அணியின் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியாத யு மும்பா அணி பெரிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

19 வயதே ஆன டெல்லி அணியின் நவீன் குமார் இந்தப் போட்டியில் சாதனை நிகழ்த்தினார். டபாங் டெல்லி அணி 40 - 24 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs U Mumba 63rd match result

இந்தப் போட்டியின் துவக்கத்தில் மும்பை அணியின் சந்தீப் நார்வால் மற்றும் ஹரேந்திரா குமார் டேக்கில்களில் அசத்தினர். ஆனால், நவீன் குமார் ரெய்டு செய்ய துவங்கிய பின் காட்சிகள் மாறின. மும்பா அணியை முதல் பாதியின் 11வது நிமிடத்தில் ஆல்-அவுட் செய்தது டபாங் டெல்லி அணி.

அதில் இருந்து ஓரளவு மீண்ட யு மும்பா அணி, போராடி முதல் பாதியில் 14 - 11 என்ற புள்ளிக் கணக்கில் 3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கி இருந்தது.

Fit India : ஃபிட் இந்தியா இயக்கம்.. தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடியின் அதிரடி!Fit India : ஃபிட் இந்தியா இயக்கம்.. தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் மோடியின் அதிரடி!

இரண்டாம் பாதியில் டபாங் டெல்லி அணியினர் சுற்றி, சுற்றி புள்ளிகள் எடுத்தனர். ரெய்டுகள் மட்டுமின்றி, தடுப்பாட்டமும் அபாரமாக இருந்தது. டெல்லி அணி 40 - 24 என்ற புள்ளிக் கணக்கில், 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அசத்தலாக டேக்கில் செய்த டெல்லியின் ரவீந்தர் பாஹல் 8 புள்ளிகள், ஜோகிந்தர் நார்வால் 6 புள்ளிகளும் பெற்றனர். நவீன் குமார் எட்டாவது முறையாக சூப்பர் 10-ஐ எட்டினார். இதன் மூலம் ஒரே போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிகளை தொடர்ந்து பெறும் சாதனைப் பட்டியலில் பர்தீப் நார்வால்-ஐ சமன் செய்தார்.

Story first published: Thursday, August 29, 2019, 14:40 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Dabang Delhi vs U Mumba 63rd match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X