Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : பிளே-ஆஃப் போகணும்.. அசத்தலாக ஆடிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்.. புனேரி பல்தான் தோல்வி!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 43 - 34 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.

2019 புரோ கபடி லீக் தொடரில் நடைபெற்ற 107வது லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் தீபக் நிவாஸ் ஹூடா மற்றும் தீபக் நார்வால் பட்டையைக் கிளப்பினர்.

Pro Kabaddi League 2019 : Jaipur Pink Panthers vs Puneri Paltan 107th match result

தீபக் நிவாஸ் ஹூடா 12 புள்ளிகளும், தீபக் நார்வால் 11 புள்ளிகளும் எடுத்தனர். ஜெய்ப்பூர் அணி பிளே ஆஃப் செல்ல வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆடியது.

முதல் பாதியிலேயே ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது ஜெய்ப்பூர் அணி. புனேரி அணியை முதல் ஆல் அவுட் செய்தது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் ஜெய்ப்பூர் அணி 20 - 13 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாம் பாதியில் புனேரி பல்தான் கடுமையாக போராடியது. ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட் செய்தது. எனினும், இரண்டாம் பாதியில் மீண்டும் ஒரு முறை புனேரி பல்தான் அணியை ஆல் அவுட் செய்த ஜெய்ப்பூர் அணி 9 புள்ளிகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.

ஆட்ட நேர முடிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 43 - 34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Thursday, September 26, 2019, 19:45 [IST]
Other articles published on Sep 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+