For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : புனேரி பல்தான் சோலியை முடித்த நவீன் குமார்.. 60 புள்ளிகளை அள்ளிய டெல்லி!

பாஞ்ச்குலா : புனேரி பல்தான் அணியை புரட்டி எடுத்த டெல்லி அணி 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

2019 புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் பாஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த லீக் போட்டியில் புனேரி பல்தான் - டபாங் டெல்லி அணிகள் மோதின. டெல்லி அணியின் நவீன் குமார் தொடர்ந்து 17வது போட்டியாக பத்துக்கும் மேற்பட்ட முறை சூப்பர் 10 ரெய்டு புள்ளிகள் எடுத்து சாதனை புரிந்தார்.

Pro Kabaddi League 2019 : Puneri paltan vs Dabang Delhi 113th match result

புனேரி பல்தான் அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்து புரோ கபடி லீக் தொடரின் பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது.

இந்தப் போட்டியில் இரு அணிகளின் தடுப்பாட்டம் சுமாராகவே அமைந்தது. ஆனால், ரெய்டில் இரண்டு அணிகளும் புள்ளிகளை வாரிக் குவித்தன. ஆனால், டெல்லி அணி நான்கு முறை புனேவை ஆல் - அவுட் செய்தது. புனே அணி ஒருமுறை கூட டெல்லியை ஆல் - அவுட் செய்யவில்லை.

முதல் பாதியில் டெல்லி அணி 30 - 16 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் புனேரி பல்தான் தன் போராட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், நவீன் குமார் மின்னல் வேகத்தில் புள்ளிகளை வாரிக் குவிக்கவே டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஆட்ட நேர முடிவில் டபாங் டெல்லி அணி 60 - 40 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்தில் உள்ளது.

Story first published: Monday, September 30, 2019, 17:31 [IST]
Other articles published on Sep 30, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Puneri paltan vs Dabang Delhi 113th match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X