Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : விகாஸ் காண்டோலா மிரட்டல் ரெய்டு.. பெரிதாக வென்ற ஹரியானா.. கந்தலான புனேரி!

பெங்களூரு : விகாஸ் காண்டோலாவின் அசத்தல் ஆட்டத்தால் மீண்டும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றது. புனேரி பல்தான் அணியை 41 - 27 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஹரியானா.

விகாஸ் காண்டோலா 11 ரெய்டு புள்ளிகள் பெற்று தன் அணியை பெரிய வெற்றி பெற வைத்தார். ரெய்டு மட்டுமின்றி டேக்கில் செய்வதிலும் ஹரியானா அணி சிறந்து விளங்கியது.

Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Haryana Steelers 71st match result

புனேரி பல்தான் அணியால் ஹரியானா அணியின் அருகே கூட நெருங்க முடியவில்லை. ஆட்டத்தின் முதல் பாதியில் விகாஸ் காண்டோலாவின் இரு அசத்தல் ரெய்டுகளால், புனேரி அணி ஆல் அவுட் ஆனது.

முதல் பாதி முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 18 - 11 என முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியில் இன்னும் வேகம் எடுத்தது ஹரியானா.

ஒரு கட்டத்தில் 20 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது ஹரியானா அணி. இதற்கு மிக முக்கிய காரணம், தடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடிய ஹரியானாவின் தர்மராஜ் சேரலாதன் தான். அவர் 5 டேக்கில் புள்ளிகளுக்கும் அதிகமாக எடுத்தார்.

போட்டியில் முடிவில் ஹரியானா அணி 41 - 27 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. ஹரியானா 21 ரெய்டு புள்ளிகளும், 14 டேக்கில் புள்ளிகளும், 4 ஆல் அவுட் மற்றும் 2 எக்ஸ்ட்ரா புள்ளிகள் எடுத்தது. புனேரி 18 ரெய்டு புள்ளிகளும், 8 டேக்கில் புள்ளிகளும், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளியும் எடுத்தது.

Story first published: Monday, September 2, 2019, 22:18 [IST]
Other articles published on Sep 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+