For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : ஆளுக்கு பாதி பாதியா பிரிச்சுக்குவோம்.. புனே அணியை பிரித்து மேய்ந்த இரு பாட்னா வீரர்கள்!

புனே : புனேரி பல்தானை அதிரடியாக வீழ்த்தி உள்ளது பாட்னா பைரேட்ஸ். பாட்னா அணியின் பர்தீப் நார்வால் மீண்டும் ஒரு முறை ரெய்டுகளில் பின்னி பெடலெடுத்தார்.

பாட்னா பைரேட்ஸ் அணி 55 - 33 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தியது.

எப்போதும் அணியை தனி ஒருவனாக மீட்கும் பர்தீப் நார்வாலுக்கு, இந்த முறை நீரஜ் குமார் கை கொடுத்தார். அவர் தடுப்பாட்டத்தில் 11 டேக்கில் புள்ளிகள் எடுத்து ஆதிக்கம் செலுத்தினார்.

நீரஜ் குமார் சாதனை

நீரஜ் குமார் சாதனை

நீரஜ் குமார் 11 டேக்கில் புள்ளிகள் எடுத்தது புரோ கபடி லீக்கில் சாதனை ஆகும். இதற்கு மஞ்சித் சில்லர் ஒரே போட்டியில் அதிக டேக்கில் புள்ளிகள் எடுத்த பட்டியலில் 11 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தார். அவருடன் இணைந்துள்ளார் நீரஜ்.

18 ரெய்டு புள்ளிகள்

18 ரெய்டு புள்ளிகள்

மறுபுறம், பர்தீப் நார்வால் 18 ரெய்டு புள்ளிகள் குவிக்க, பாட்னா அணி 22 புள்ளிகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றது பாட்னா பைரேட்ஸ் அணி.

மிரட்டல் ரெய்டர் பர்தீப் நார்வால்

மிரட்டல் ரெய்டர் பர்தீப் நார்வால்

பர்தீப் நார்வால் புரோ கபடி வரலாற்றில் அதிக புள்ளிகள் எடுத்த வீரர் ஆவார். 1000 புள்ளிகளுக்கும் மேல் ரெய்டுகளில் புள்ளிகளை வாரிக் குவித்துள்ளார் இந்த மிரட்டல் ரெய்டர். இந்தப் போட்டியில் முதல் பாதியிலேயே மிரட்டினார் பர்தீப்.

கொரிய வீரர் ஆட்டம்

கொரிய வீரர் ஆட்டம்

முதல் பாதியில் பர்தீப் நார்வால் ரெய்டுகளில் மிரட்ட, அவர் அவிட் ஆக்கப்பட்டு, வெளியேற்றப்படும் நேரங்களில் கொரிய வீரர் ஜாங் குன் லீ ரெய்டுகளில் புள்ளிகள் எடுத்தார். அதனால், புனேரி அணி அடி மேல் அடி வாங்கியது.

பாட்னா ஆதிக்கம்

பாட்னா ஆதிக்கம்

முதல் பாதி முடிவில் 27 - 17 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது பாட்னா. இரண்டாம் பாதியிலும் அதே நிலை தான், புனேரி பல்தான் அணியால் எந்த இடத்திலும் முன்னேற முடியவில்லை.

பாட்னா வெற்றி

பாட்னா வெற்றி

ஆட்ட நேர முடிவில் பாட்னா பைரேட்ஸ் அணி 55 - 33 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்ற பாட்னா அணி, புள்ளிப் பட்டியலில் எட்டாம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

Story first published: Monday, September 16, 2019, 16:07 [IST]
Other articles published on Sep 16, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Patna Pirates 92nd league match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+