For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : அஜித் குமாரின் அமர்க்களம்.. கடைசி நிமிடத்தில் தோல்வியில் இருந்து தப்பிய தமிழ் தலைவாஸ்!

புனே : புனேரி பல்தான் உடனான போட்டியில் கடைசி நிமிடத்தில் டை செய்து தோல்வியில் இருந்து தப்பியது தமிழ் தலைவாஸ் அணி.

அஜித் குமார் அசத்தலாக ரெய்டுகள் செய்து 18 புள்ளிகளை எடுத்தார். அது தான் தமிழ் தலைவாஸ் அணியை போட்டியின் கடைசி நிமிடம் வரை புனேரி அணிக்கு அருகே வைத்து இருந்தது.

Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Tamil Thalaivas 96th league match result

கடைசி ரெய்டில் புனே அணியின் நிதின் டோமர் செய்த தவறால், போட்டியை டை செய்தது தமிழ் தலைவாஸ்.

வழக்கம் போல, தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது. அஜித் குமார் சிறப்பாக ஆடினாலும், புனேரி அணி முன்னிலையில் இருந்தது. முதல் பாதியில் அந்த அணி 18 - 12 என்ற அளவில் ஆறு புள்ளிகள் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் அஜித் குமார் தனி ஆளாக தமிழ் தலைவாஸ் அணியை கரை சேர்த்தார். கடைசி நிமிடத்தில் புனே அணியில் ஒரே வீரராக இருந்த நிதின் டோமர் அவுட் ஆகாமல் ரெய்டு சென்றால், அந்த அணி வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

அப்போது அவர் செய்த தவறால், தமிழ் தலைவாஸ் அணியிடம் சிக்கினார். புனேரி அணி ஆல் - அவுட் ஆனது. தமிழ் தலைவாஸ் அணி 36 - 36 என்ற புள்ளிக் கணக்கில் போட்டியை டை செய்தது.

இதற்கு முன் நடைபெற்ற 95வது லீக் போட்டியில் யு மும்பா அணி 39 - 36 என்ற புள்ளிக் கணக்கில் உபி யுத்தா அணியை வீழ்த்தியது.

Story first published: Friday, September 20, 2019, 16:52 [IST]
Other articles published on Sep 20, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Tamil Thalaivas 96th league match result
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+