Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : நிதின் டோமர் அபாரம்.. புனேரி பல்தான் அசத்தல் வெற்றி.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி!

டெல்லி: புனேரி பல்தான் அணி 34 - 27 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

புனேரி பல்தான் அணியின் நிதின் டோமர் 8 ரெய்டு புள்ளிகளும், மன்ஜீத் 9 ரெய்டு புள்ளிகளும் எடுத்து அசத்தினர். இத்தனைக்கும் தெலுகு டைட்டன்ஸ் ஏழு சூப்பர் டேக்கில் செய்து தடுப்பாட்டத்தில் அசத்தியது.

Pro Kabaddi League 2019 : Puneri Paltan vs Telugu Titans 65th match result

இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் புனே அணி ரெய்டு மற்றும் டேக்கில்களில் அபாரமாக செயல்பட்டது. டைட்டன்ஸ் அணியின் சித்தார்த் தேசாய்-ஐ தடுத்ததோடு, நிதின் டோமர் ரெய்டுகளில் அசத்தினார்.

தெலுகு டைட்டன்ஸ் அணியை விஷால் பரத்வாஜ் தன் டேக்கில்களால் காப்பாற்றினார். முதல் பாதியில் ஐந்து சூப்பர் டேக்கில் செய்தார் விஷால். அப்படி இருந்தும் தெலுகு அணி முதல் பாதியின் இறுதியில் ஆல் அவுட் ஆனது.

முதல் பாதியில் 17 - 14 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது புனேரி பல்தான். இரண்டாம் பாதியில் தெலுகு டைட்டன்ஸ் அணியின் சித்தார்த் தேசாய் ரெய்டுகளில் பொங்கி எழுந்தார். அவரது முதல் நான்கு ரெய்டுகளில் நான்கு புள்ளிகளை எடுத்து அசத்தினார். ஆனால், தடுப்பாட்டம் படுத்து விட்டது.

அதை அடுத்து, புனேரி பல்தான் அணி 34 - 27 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. போட்டியின் இறுதிக் கட்டத்தில் நிதின் டோமர் 400 புரோ கபடி புள்ளிகளை எட்டி புதிய மைல்கல்லை எட்டினார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் புனேரி பல்தான் அணி புள்ளிப் பட்டியலில் பத்தாம் இடத்தில் தான் உள்ளது. தெலுகு டைட்டன்ஸ் அணி பதினோராவது இடத்தில் உள்ளது.

Story first published: Saturday, August 31, 2019, 14:58 [IST]
Other articles published on Aug 31, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+