For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : அனுபவம் இருந்தும்.. பலமான அணி இருந்தும் வேஸ்ட்! தொடரும் தமிழ் தலைவாஸ் சோகம்!

டெல்லி : பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான 64வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி முழு பலத்துடன் இறங்கியும் எந்த பயனும் இல்லாமல் போனது.

பெங்கால் வாரியர்ஸ் ரெய்டுகளில் அசத்தியது. வரிசையாக புள்ளிகளை அள்ளிய அந்த அணி 35 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Pro Kabaddi League 2019 : Tamil Thalaivas vs Bengal Warriors 64th match result

பெங்கால் அணியின் பிரபஞ்சன் 10 ரெய்டு புள்ளிகளும், மணிந்தர் சிங் 9 ரெய்டு புள்ளிகளும் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் அணி அனைத்து நட்சத்திர வீரர்களை வைத்துக் கொண்டு ஆடியும் எந்த பலனும் இல்லாமல் போனது.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் 11வது நிமிடத்திலேயே தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்தது பெங்கால் வாரியர்ஸ். எனினும், அஜய் தாக்குர் அசத்தல் ரெய்டுகளால் 8 புள்ளிகளை அள்ளினார்.

பெங்கால் வாரியர்ஸ் அணி 15 - 14 என்ற புள்ளிக் கணக்கில் சிறிய முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியில் முன்னிலையை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது பெங்கால், ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 3 புள்ளிகள் மட்டுமே பின் தங்கி இருந்தது.

இது அவமானம்.. ஏன் இப்படி பண்றாரு கோலி? அந்த முடிவை எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்! இது அவமானம்.. ஏன் இப்படி பண்றாரு கோலி? அந்த முடிவை எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்!

அப்போது அந்த அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தடுப்பாட்டத்தில் நிறைய கோட்டை விட்ட அனுபவ தமிழ் தலைவாஸ் அணி, மீண்டும் ஒரு முறை ஆல் அவுட் ஆகி பெரும் பின்னடைவை சந்தித்தது.

அஜய் தாக்குர் 10 ரெய்டு புள்ளிகளுக்கும் மேல் எடுத்தும் தமிழ் தலைவாஸ் அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. இறுதியில் 35 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.

Story first published: Friday, August 30, 2019, 22:39 [IST]
Other articles published on Aug 30, 2019
English summary
Pro Kabaddi League 2019 : Tamil Thalaivas vs Bengal Warriors 64th match result
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X