Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : ஜெயிக்க தெரியாது எங்களுக்கு.. மீண்டும் மண்ணைக் கவ்விய தமிழ் தலைவாஸ்.. ஹரியானா வெற்றி!

புனே : ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ்.

புனேவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டிகளில், நேற்று தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

இதற்கு முன் ஏழு போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்து இருந்தது தமிழ் தலைவாஸ். இடையில், பயிற்சியாளரை கூட மாற்றி விட்டது அந்த அணி. இருந்தும் வெற்றிக்கான சுவடே இல்லை.

Pro Kabaddi League 2019 : Tamil Thalaivas vs Haryana Steelers 90th league match result

இந்த நிலையில், இந்தப் போட்டியிலும் துவக்கத்தில் ஹரியானா அணியிடம் செமயாக அடி வாங்கியது தமிழ் தலைவாஸ். ஹரியானா அணியின் விகாஸ் கொண்டோலா மற்றும் வினய் ரெய்டு செய்து புள்ளிகளை அள்ளினர்.

அதன் பின்னர் விழித்துக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணியின் ராகுல் சௌதரி புள்ளிகள் எடுக்கத் துவங்கினார். முதல் பாதி முடிவில் 16 - 14 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது ஹரியானா அணி.

இரண்டாம் பாதியின் முதல் நிமிடத்தில் ஹரியானா அணியை ஆல் - அவுட் செய்து வியப்பை ஏற்படுத்தினார் ராகுல் சௌதரி. எனினும், அதன் பின் மீண்டும் தமிழ் தலைவாஸ் சரியத் துவங்கியது.

ராகுல் சொதரி 10 ரெய்டு புள்ளிகள் எடுத்தார். ஹரியானா அணியின் விகாஸ் 13 ரெய்டு புள்ளிகள் எடுத்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 43 - 35 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

இந்த தோல்வியுடன் சேர்த்து தமிழ் தலைவாஸ் அணி 16 போட்டிகளில் 11 தோல்விகள் அடைந்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Story first published: Sunday, September 15, 2019, 15:32 [IST]
Other articles published on Sep 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+