Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : பாகுபலியே ஆடினாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாது.. கெத்து காட்டிய யு மும்பா!

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெறும் புரோ கபடி லீக் சுற்றுப் போட்டியில், யு மும்பா - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் யு மும்பா அணி அதிரடியாக ஆடி தெலுகு டைட்டன்ஸ் அணியை புரட்டிப் போட்டது.

Pro Kabaddi League 2019 : U Mumba vs Telugu Titans 84th league match result

தெலுகு டைட்டன்ஸ் அணியின் அதிரடி ரெய்டர் சித்தார்த் தேசாய்-ஐ எளிதாக தடுத்த யு மும்பா அணி ரெய்டு, டேக்கில் இரண்டிலும் பட்டையைக் கிளப்பியது.

கும்பலாக எதிரணியை வளைத்துப் போட்டு ரெய்டு செய்யும் வலிமை பெற்ற சித்தார்த் தேசாய் பாகுபலி என அழைக்கப்படுகிறார். ஆனால், அவரால் யு மும்பா அணியின் தடுப்பாட்டத்தை உடைக்க முடியவில்லை.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் யு மும்பா கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், இரண்டாம் பாதியில் தெலுகு அணியை மூன்று முறை ஆல் அவுட் செய்து மிரட்டியது. மும்பா அணியின் பசெல் அட்ரச்சலி 6 டேக்கில் புள்ளிகள் பெற்றார். இறுதியில் 41 - 27 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு அணியை வீழ்த்தியது யு மும்பா.

இந்தப் போட்டியின் வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது யு மும்பா. தெலுகு டைட்டன்ஸ் அணி ஒன்பதாவது இடத்தில் 30 புள்ளிகளுடன் உள்ளது.

தெலுகு டைட்டன்ஸ் அணி தன் முதல் எட்டு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற தெலுகு டைட்டன்ஸ் அணி, அடுத்த ஐந்து போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று இருந்தது. எனினும், தற்போது மீண்டும் மோசமான தோல்விகளை சந்திக்கத் துவங்கி உள்ளது.

Story first published: Wednesday, September 11, 2019, 14:15 [IST]
Other articles published on Sep 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+