For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

PKL 2019 : முக்கியமான ஆள் இல்லை.. டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி பிளே - ஆஃப் செல்லும் உபி யுத்தா!

நொய்டா : உபி யுத்தா அணி டபாங் டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி பிளே - ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

2019 புரோ கபடி லீக் தொடரின் 122வது லீக் போட்டியில் உபி யுத்தா - டபாங் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் உபி யுத்தா அணி 50 - 33 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Pro Kabaddi League 2019 : UP Yoddha vs Dabang Delhi 122nd match result

இந்தப் போட்டியில் டெல்லி அணியின் நட்சத்திர ரெய்டர் நவீன் குமார் அணியில் பங்கேற்கவில்லை. அதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.

உபி யுத்தா அணியின் நட்சத்திர ரெய்டர் மோனு கோயாத் 11 ரெய்டு புள்ளிகள் பெற்று அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

டெல்லி அணி முதல் பாதியில் படுமோசமாக ஆடியது. முதல் பாதி, முடிவில் உபி யுத்தா அணி 22 - 12 என்ற அளவில் முன்னிலை பெற்று இருந்தது.

இரண்டாம் பாதியில் இன்னும் வேகம் எடுத்த உபி யுத்தா அணி டெல்லி அணியை ஒட்டுமொத்தமாக மூன்று முறை ஆல் அவுட் செய்து மிரட்டியது.

டெல்லி அணியின் நீரஜ் அகர்வால் தனி ஆளாக ரெய்டுகளில் போராடினார். அவர் 10க்கும் மேற்பட்ட புள்ளிகளை எடுத்தது மட்டுமே டெல்லி அணிக்கு சாதகமான விஷயம்.

ஆட்ட நேர முடிவில் உபி யுத்தா 50 - 33 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று பிளே - ஆஃப் செல்வதை உறுதி செய்தது.

Story first published: Sunday, October 6, 2019, 19:01 [IST]
Other articles published on Oct 6, 2019
English summary
Pro Kabaddi League 2019 : UP Yoddha vs Dabang Delhi 122nd match result. UP Yoddha beat Dabang Delhi by 50 - 33.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+