Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2019 : சரி சமமாக மோதிய புனேரி பல்தான்.. தடுத்து வீழ்த்திய உபி யுத்தா.. பரபர கபடி போட்டி!

நொய்டா : ரெய்டு, தடுப்பாட்டம் இரண்டிலும் கலக்கிய உபி யுத்தா அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தியது.

நொய்டாவில் நடைபெற்ற 125வது புரோ கபடி லீக் தொடரின் போட்டியில் உபி யுத்தா - புனேரி பல்தான் அணிகள் மோதின.

Pro Kabaddi League 2019 : UP Yoddha vs Puneri Paltan 125th match result

உபி அணியின் கேப்டன் நிதேஷ் குமார் 6 டேக்கில் புள்ளிகள் எடுத்து அசத்தினார். புனேரி பல்தான் அணியும் ரெய்டு, தடுப்பாட்டத்தில், உபி அணிக்கு ஈடு கொடுத்து ஆடியது.

எனினும், உபி அணி இரண்டு முறை ஆல் - அவுட் செய்தது. மேலும், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது அந்த அணிக்கு சாதகமாக அமைந்தது.

முதல் பாதியில் உபி யுத்தா அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணி 29 - 15 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியில் சுதாரித்தது புனேரி பல்தான். அந்த அணி ஒரு முறை உபி அணியை ஆல் அவுட் செய்தது. எனினும், அந்த அணியை முந்த முடியவில்லை.

Pro Kabaddi League 2019 : UP Yoddha vs Puneri Paltan 125th match result

புள்ளிகள் வித்தியாசம் சுருங்குவதை கண்ட உபி அணி தங்கள் தடுப்பாட்டத்தை வலுப்படுத்தியது. அதனால், புனேரி அணி கடைசி நிமிடங்களில் எளிதாக புள்ளிகள் பெற முடியாமல் தடுமாறியது.

முதல் பாதியில் ஒரு முறையும், இரண்டாம் பாதியில் ஒரு முறையும் புனேரி அணியை ஆல் அவுட் செய்த உபி யுத்தா அணி ஆட்ட நேர முடிவில் 43 - 39 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

Story first published: Monday, October 7, 2019, 19:11 [IST]
Other articles published on Oct 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+