Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக்: ஸ்ட்ரக்சரில் சென்ற கேப்டன்.. தவிக்கும் தமிழ் தலைவாஸ்.. பவன் ஷெராவத் உடல்நிலை என்ன?

பெங்களூரு: புரோ கபடி லீக்கில் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனின் காயம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ப்ரோ கபடி லீக்கின் 9வது சீசன் கடந்த அக்டோபர்ம் 7ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடந்து வருகிறது.

கேப்டனுக்கு காயம்

கேப்டனுக்கு காயம்

இந்த தொடரில் தமிழக ரசிகர்களுக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தமிழ் தலைவாஸ் அணியின் முதல் போட்டியில் குஜராத் அணியுடன் மோதி 31 - 31 என்ற புள்ளிகளில் டிராவில் முடிந்தது. இந்த போட்டியின் போது தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. எதிரணி வீரரை பிடிக்க சென்ற போது, முழுங்காலில் படு மோசமாக காயம் ஏற்பட்டு ஸ்ட்ரக்சரில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் ஸ்டேடியத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 தலைவாஸுக்கு பின்னடைவு

தலைவாஸுக்கு பின்னடைவு

பவன் ஷெராவத் இன்றி 2வது போட்டியில் ஹரியானவை எதிர்கொண்ட தமிழ் தலைவாஸ் அணி, 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியையே சந்தித்தது. கேப்டனும், முன்னாள் வீரருமான ஷெராவத் இன்றி விளையாடுவதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால் அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

உடல்நிலை என்ன

உடல்நிலை என்ன

இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து பயிற்சியாளர் முக்கிய தகவலை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பவன் தமிழ் தலைவாஸ் அணி மட்டுமல்லாது இந்தியாவிற்கும் மிகப்பெரிய சொத்து. அவரை அவசரமாக அணிக்குள் கொண்டு வந்து ரிஸ்க் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் அடுத்ததாக ஆசிய விளையாட்டுப்போட்டிகளும் இருக்கின்றன.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

அவர் முழுமையாக குணமடைந்து வரும் வரை காத்திருக்க போகிறோம். உடற்தகுதியை நிரூபித்த பின்னர் அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படுவார். இதற்காக மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து மேட்டிற்கு திரும்புவார் என்று நான் நம்புகிறேன் எனக்கூறினார்.

Story first published: Friday, October 14, 2022, 16:14 [IST]
Other articles published on Oct 14, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+