Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி புள்ளிப் பட்டியல் - டாப்பில் தமிழ் தலைவாஸ்.. எந்த இடம்? ஜெய்ப்பூரை முந்தி அசத்தல்

ஹைதராபாத்: 2024 புரோ கபடி லீக் தொடரின் புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ள தமிழ் தலைவாஸ் அணி இரண்டு வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா செய்து இருக்கிறது. இதில் மொத்தம் 14 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. ஸ்கோர் வித்தியாசம் 18 என்பதாக உள்ளது.

2024 கபடி லீக் தொடரின் புள்ளி பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி முதல் இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. கடந்த சீசனில் மோசமாக செயல்பட்டு இருந்த தமிழ் தலைவாஸ் அணி இந்த ஆண்டு துவக்கம் முதலே சீறிப் பாய்ந்து வருகிறது. தனது முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 15 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

pro kabaddi pro kabaddi 2024 tamil thalaivas 2024

அடுத்து புனேரி பல்தான் அணியை 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராக 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது தமிழ் தலைவாஸ். இந்த நிலையில், நான்காவது போட்டியில் வலுவான அணிகளில் ஒன்றான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை சந்தித்தது.

அந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சரி சமமாக மோதியதை அடுத்து போட்டி 30 - 30 என டிரா ஆனது. இதை அடித்து தமிழ் தலைவாஸ் அணி நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா செய்து மொத்தம் 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் புனேரி பல்தான் மற்றும் இரண்டாவது இடத்தில் உபி யுத்தாஸ் அணிகள் தலா 16 புள்ளிகளுடன் உள்ளன.

Story first published: Monday, October 28, 2024, 10:57 [IST]
Other articles published on Oct 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+