Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி புள்ளிப்பட்டியல் - 3 அணிகளுக்கு ஆப்பு வைத்த தமிழ் தலைவாஸ்.. கம்பேக் கிங் வைத்த ட்விஸ்ட்

சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் தனது கடைசி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இதுவரை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புரோ கபடி வரலாற்றிலேயே தமிழ் தலைவாஸ் அணி இதுவரை தொடர்ந்து நான்கு போட்டிகளை வென்றதில்லை.

இந்த நிலையில், பொங்கல் முதல் தான் ஆடிய நான்கு போட்டிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் 40 புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது தமிழ் தலைவாஸ். தனது 16வது போட்டியில் யு மும்பா அணியை 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழ் தலைவாஸ். இந்த ஒரே வெற்றியால் யு மும்பா, பெங்களுரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய மூன்று அணிகளை புள்ளிப் பட்டியலில் முந்தி ஏழாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

Pro Kabaddi League 2024 Points Table : Tamil Thalaivas beat 3 teams to reach 7th in the points table


இதில் முக்கியமான விஷயம் அந்த அணியின் ஸ்கோர் வித்தியாசம் தான். தமிழ் தலைவாஸ்-க்கு நெருக்கமான புள்ளிகளில் இருக்கும் ஹரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, பெங்களுரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகள் மைனஸில் தான் புள்ளி வித்தியாசத்தை வைத்துள்ளன.

அதனால், லீக் சுற்றின் இறுதியில் ஒருவேளை தமிழ் தலைவாஸ் வேறு அணிக்கு இணையான, சரிசமமான புள்ளிகளை பெற்று இருந்தாலும் ஸ்கோர் வித்தியாசம் காரணமாக முதல் ஆறு இடங்களுக்குள் இடம் பெறும் வாய்ப்பு கிடைக்கக் கூடும். தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் ஆறு லீக் போட்டிகள் உள்ளன. தற்போது பெரும் தன்னம்பிக்கை கொண்ட அணியாக மாறி இருக்கும் நிலையில், அடுத்த ஆறு போட்டிகளில் குறைந்தது நான்கு போட்டிகளை வென்றால் பிளே-ஆஃப் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் (94வது லீக் போட்டியின் முடிவில்) -

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 66 புள்ளிகள் - 1வது இடம்
புனேரி பல்தான் - 63 புள்ளிகள் - 2வது இடம்
டபாங் டெல்லி - 59 புள்ளிகள் - 3வது இடம்
குஜராத் டைட்டன்ஸ் - 49 புள்ளிகள் - 4வது இடம்
ஹரியானா ஸ்டீலர்ஸ் - 45 புள்ளிகள் - 5வது இடம்
பாட்னா பைரேட்ஸ் - 42 புள்ளிகள் - 6வது இடம்
தமிழ் தலைவாஸ் - 40 புள்ளிகள் - 7வது இடம்
யு மும்பா - 40 புள்ளிகள் - 8வது இடம்
பெங்களுரு புல்ஸ் - 40 புள்ளிகள் - 9வது இடம்
பெங்கால் வாரியர்ஸ் - 38 புள்ளிகள் - 10வது இடம்
யுபி யுத்தாஸ் - 23 புள்ளிகள் - 11வது இடம்
தெலுகு டைட்டன்ஸ் - 16 புள்ளிகள் - 12வது இடம்

Story first published: Monday, January 29, 2024, 6:58 [IST]
Other articles published on Jan 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+