Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2024 புரோ கபடி புள்ளிப் பட்டியல் - செம அடி வாங்கிய தமிழ் தலைவாஸ்.. பெரும் சரிவு.. மீள முடியுமா?

ஹைதராபாத்: 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தோல்விப் பாதையில் செல்லத் தொடங்கி இருக்கிறது. அந்த அணி கடைசியாக ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து இருக்கிறது. முதல் ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் தற்போது வேகமாக சரிந்து உள்ளது.

தற்போது தான் ஆடிய எட்டு போட்டிகளில் மூன்று வெற்றிகள், நான்கு தோல்விகள் மற்றும் ஒரு டை செய்து 21 புள்ளிகள் பெற்று இருக்கிறது. 2024 புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியலில் தமிழ் தலைவாஸ் அணி ஆறாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இருந்து ஆறாவது இடத்துக்கு சரிந்து இருக்கிறது.

pro kabaddi pro kabaddi 2024 pkl 2024 2024


கடந்த ஆண்டு போலவே இந்த முறையும் தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடி லீக் தொடரின் முதல் பாதியில் மோசமாக விளையாடத் துவங்கி இருக்கிறது. நேற்று நடந்த போட்டியில் டபாங் டெல்லி அணிக்கு எதிராக 13 புள்ளிகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது.

இந்தப் போட்டியில் டபாங் டெல்லி அணி 39 புள்ளிகள் பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி 26 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 14 போட்டிகள் உள்ளன. அதனால், புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களில் இடம்பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

ஆனால், இப்போது ஏற்பட்டு இருக்கும் சரிவை அந்த அணி விரைவாக சரி செய்ய வேண்டும். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியின் வீரர்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் விளையாட முடியும்.

Story first published: Saturday, November 9, 2024, 16:10 [IST]
Other articles published on Nov 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+