Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் - நெருங்கிய கிளைமாக்ஸ்.. அரை இறுதியில் வெல்லப் போவது யார்?

ஹைதராபாத் : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடர் அதன் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. முன்னதாக நடந்த எலிமினேட்டர் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், டபாங் டெல்லியையும், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின.

இதை அடுத்து இன்று இரண்டு அரை இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 8 மணிக்கு நடைபெற உள்ள முதல் அரை இறுதியில் புனேரி பல்தான் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன. 9 மணிக்கு துவங்க உள்ள மற்றொரு அரை இறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Pro Kabaddi League 2024 semi final : Puneri Paltan vs Patna Pirates and Jaipur Pink Panthers vs Haryana Steelers

முன்னதாக இந்த தொடரில் முதலில் நடைபெற்ற லீக் சுற்றில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

புள்ளிப் பட்டியலில் 3 முதல் 6 வரையிலான இடங்களை பெற்ற அணிகள் எலிமினேட்டர் சுற்றில் சந்தித்தன. இதில் பாட்னா பைரட்ஸ், டபாங் டெல்லியையும், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வீழ்த்தின.

இதை அடுத்து இன்று அரை இறுதி போட்டிகள் நடைபெற உள்ளன. தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு முதல் அரை இறுதிப் போட்டி துவங்க உள்ளது. அடுத்து இரவு 9 மணிக்கு இரண்டாவது அரை இறுதி நடைபெறும்.

Story first published: Wednesday, February 28, 2024, 19:15 [IST]
Other articles published on Feb 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+