Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி 2024 - தமிழ் தலைவாஸ் மேட்ச் எப்போது? போட்டி அட்டவணை, நேரம், எந்த சேனலில் பார்க்கலாம்?

ஹைதராபாத் : 2024 புரோ கபடி லீக் தொடர் இன்று (அக்டோபர் 18) முதல் தொடங்கி இருக்கிறது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் போட்டிகள் எப்போது துவங்குகிறது? போட்டி நேரம், நாள் மற்றும் எந்த சேனலில் போட்டிகளை பார்க்கலாம்? என்பது குறித்து இங்கே காணலாம்.

11வது சீசன் புரோ கபடி லீக் தொடரில் இந்தியாவில் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 18 அன்று நடந்த முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. முதல் பகுதி போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள கௌச்சிபாலி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

pro kabaddi pro kabaddi 2024 pkl 2024 2024


இந்த நிலையில் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி நாளை தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது. அக்டோபர் 19 அன்று நடக்க உள்ள இந்தத் தொடரின் மூன்றாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது. இந்த போட்டி சரியாக இரவு 8 மணிக்கு துவங்கி நடைபெறும்.

இந்தியாவில் 2024 புரோ கபடி லீக் தொடரை தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். 2024 புரோ கபடி லீக் போட்டிகளை மொபைல் மற்றும் இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் இந்த போட்டிகளை நேரலையில் பார்க்கலாம்.

தமிழ் தலைவாஸ் அணி விபரம் :

ரைடர்ஸ் :

விஷால் சாஹல், ராம்குமார் மாயாண்டி, நிதின் சிங், நரேந்தர், தீரஜ் பெயில்மேரே, சச்சின், சௌரப் ஃபகாரே

டிஃபென்டர் :

முருகன் அபிஷேக், ஹிமான்ஷு, சாகர், ஆஷிஷ், மோஹித், சாஹில் குலியா, அனுஜ் கவாடே, ரோனக், நிதேஷ் குமார், அமீர்ஹோசைன் பஸ்தாமி

ஆல்ரவுண்டர் :

மொயின் சஃபாகி

Story first published: Friday, October 18, 2024, 21:50 [IST]
Other articles published on Oct 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+