Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி புள்ளிப் பட்டியல் - 2 மேட்ச் டை.. தமிழ் தலைவாஸ்-க்கு உதவிய புனேரி பல்தான்

சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் பக்கம் காற்று அடிக்கத் துவங்கி இருக்கிறது. அந்த அணி ஆடாத போட்டிகளில் எல்லாம் கூட அந்த அணிக்கு சாதகமான முடிவுகள் மட்டும் தான் கிடைக்கின்றன.

சமீபத்திய போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜெயிக்க வாய்ப்பு இருந்தும் இரண்டாம் பாதியில் சொதப்பிய முதல் இடத்தில் இருக்கும் புனேரி பல்தான் அணி போட்டியை டை செய்தது. அதனால், ஆறாம் இடத்தில் இருந்த பாட்னா அணி ஐந்தாம் இடத்துக்கு மட்டும் முன்னேறி இருக்கிறது. இது ஒரு வகையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு புள்ளிப் பட்டியலில் முன்னேற சாதகமாக இருக்கும்.

தற்போது புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் பிளே-ஆஃப் செல்ல வேண்டும் என்றால் எந்தெந்த அணிகள் எல்லாம் ஜெயிக்கக் கூடாதோ, அந்த அணிகள் எதுவும் கடந்த ஒரு வாரமாக ஜெயிக்கவில்லை.

Pro Kabaddi League 2024 : Tamil Thalaivas gets help from Puneri Paltan to move up in points table

முன்னதாக புனேரி பல்தான் அணி யு மும்பா உடன் டை செய்து யு மும்பா கூடுதலாக 2 புள்ளிகள் பெறாமல் தடுத்தது. போட்டியில் வென்றால் 5 புள்ளிகளும், டை செய்தால் 3 புள்ளிகளும் மட்டுமே கிடைக்கும். அந்த வகையில் யு மும்பா 3 புள்ளிகள் மட்டும் பெற்றது. அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி யு மும்பாவை தோற்கடித்தது. அதனால் புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணியால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. இது ஒரு வகையில் தமிழ் தலைவாஸ் அணிக்கு உதவும்.

அடுத்து பாட்னா பைரேட்ஸ் அணியை முன்னேற விடாமல் 45 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் வைத்து இருக்கிறது புனேரி பல்தான் அணி. மற்றொரு போட்டியில் மூன்றாம் இடத்தில் இருக்கும் டபாங் டெல்லி அணி, 11வது இடத்தில் இருக்கும் யுபி யுத்தாஸ் அணியை வீழ்த்தியது. யுபி யுத்தாஸ் வெற்றி பெற்றாலும் அது எந்த வகையிலும் தமிழ் தலைவாஸ் அணியின் முன்னேற்றத்தை இனி தடுக்க முடியாது. காரணம், தமிழ் தலைவாஸ் 35 புள்ளிகளுடனும், யுபி யுத்தாஸ் 23 புள்ளிகளுடனும் உள்ளன. 11வது இடத்தில் இடத்தில் இருக்கும் யுபி யுத்தாஸ் மற்றும் 12வது இடத்தில் இருக்கும் தெலுகு டைட்டன்ஸ் அணிகளால் இனி பிளே-ஆஃப் செல்ல முடியாது என்பதால் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒரு பிரச்சனை முடிந்துள்ளது.

இப்போது தமிழ் தலைவாஸ் 35 புள்ளிகளுடன் உள்ளது. தனக்கு மேல் உள்ள பெங்களுரு புல்ஸ் (37 புள்ளிகள்), பெங்கால் வாரியர்ஸ் (38 புள்ளிகள்), யு மும்பா (40 புள்ளிகள்), ஹரியானா ஸ்டீலர்ஸ் (45 புள்ளிகள்), பாட்னா பைரேட்ஸ் (45 புள்ளிகள்) ஆகிய அணிகளை அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் முந்த வாய்ப்பு உள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இன்னும் 7 லீக் போட்டிகள் இருப்பதால் இந்த அணிகளை முந்த முடியும் என்றே கருதப்படுகிறது.

புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் (92வது லீக் போட்டியின் முடிவில்) -

புனேரி பல்தான் - 63 புள்ளிகள் - 1வது இடம்
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 63 புள்ளிகள் - 2வது இடம்
டபாங் டெல்லி - 59 புள்ளிகள் - 3வது இடம்
குஜராத் டைட்டன்ஸ் - 49 புள்ளிகள் - 4வது இடம்
பாட்னா பைரேட்ஸ் - 45 புள்ளிகள் - 5வது இடம்
ஹரியானா ஸ்டீலர்ஸ் - 45 புள்ளிகள் - 6வது இடம்
யு மும்பா - 40 புள்ளிகள் - 7வது இடம்
பெங்கால் வாரியர்ஸ் - 38 புள்ளிகள் - 8வது இடம்
பெங்களுரு புல்ஸ் - 37 புள்ளிகள் - 9வது இடம்
தமிழ் தலைவாஸ் - 35 புள்ளிகள் - 10வது இடம்
யுபி யுத்தாஸ் - 23 புள்ளிகள் - 11வது இடம்
தெலுகு டைட்டன்ஸ் - 16 புள்ளிகள் - 12வது இடம்

Story first published: Saturday, January 27, 2024, 23:51 [IST]
Other articles published on Jan 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+