Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி - தமிழ் தலைவாஸ் செய்த மாஸ் சம்பவம்.. மத்த டீம் எல்லாம் காலி.. கெத்தாக நிற்கும் தலைவாஸ் அணி

ஹைதராபாத்: 2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி மட்டுமே இதுவரை ஒரு தோல்வி கூட சந்திக்காத அணியாக உள்ளது. மற்ற அணிகள் எல்லாம் ஒரு தோல்வியாவது சந்தித்து இருக்கின்றன. கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் முதல் பாதி முழுவதும் அதிக தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால், இந்த ஆண்டு தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று இருக்கிறது.

இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் 44 புள்ளிகளை எடுத்து 15 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்து தனது இரண்டாவது போட்டியில் கடந்த சீசனின் சாம்பியன் அணியான புனேரி பல்தான் அணியை 5 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

pro kabaddi pro kabaddi 2024 pkl 2024 2024

இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளை பெற்றிருந்தது. புனேரி பல்தான் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணியின் தடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது. இதன் மூலம், இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்று 10 புள்ளிகள் மற்றும் 20 ஸ்கோர் வித்தியாசத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி.

உபி யுத்தாஸ் மற்றும் புனேரி பல்தான் ஆகிய இரண்டு அணிகளும் மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று இருக்கின்றன. அந்த இரண்டு அணிகளும் 11 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

தமிழ் தலைவாஸ் அணி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்து பாட்னா பைரேட்ஸ் அணியை சந்திக்க உள்ளது தமிழ் தலைவாஸ். இந்தப் போட்டியில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை எட்டிப் பிடிக்கும்.

Story first published: Friday, October 25, 2024, 10:26 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+