Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழ் தலைவாஸ்-க்கு டாடா பைபை.. பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த 6 அணிகள்.. புரோ கபடி லீக் ட்விஸ்ட்

சென்னை : பத்தாவது சீசன் புரோ கபடி லீக் தொடரின் லீக் சுற்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. லீக் சுற்றில் இன்னும் ஐந்து போட்டிகளே மீதமுள்ளன. தமிழ் தலைவாஸ் தனது அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி முடித்து விட்டது. அதன் முடிவில் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இன்னும் ஐந்து லீக் போட்டிகள் மீதமிருந்தாலும் ஆறு அணிகள் ஏற்கனவே தங்களின் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. தமிழ் தலைவாஸ் அணி இந்த சீசனின் முதல் பாதியில் படுமோசமாக ஆடியது. தனது முதல் 12 போட்டிகளில் 10 போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. அதன் காரணமாகவே அந்த அணி பிளே-ஆஃப் செல்ல முடியாமல் போனது.

 Pro Kabaddi League 2024 : Tamil Thalaivas out of Play-Off game in 10th season

இந்த சீசனின் இரண்டாவது பாதியில் அதிக வெற்றிகளை பெற்ற போதும் மற்ற அணிகள் அதற்கு முன்பே அதிக வெற்றிகளை பெற்று இருந்ததால் தமிழ் தலைவாஸ் அணியால் அந்த அணிகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பல்தான், டபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், பாட்னா பைரேட்ஸ் ஆகிய ஆறு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இன்னும் ஐந்து லீக் போட்டிகள் இருக்கும் நிலையில் இந்த ஆறு அணிகளின் இடங்கள் முதல் ஆறு இடங்களுக்குளாக வேண்டுமானால் மாறலாம். ஆனால், மற்ற ஆறு அணிகள் பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலை உள்ளது.

2023 - 24 புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் :

1 - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 87 புள்ளிகள்
2 - புனேரி பல்தான் - 86 புள்ளிகள்
3 - டபாங் டெல்லி - 79 புள்ளிகள்
4 - குஜராத் ஜெயன்ட்ஸ் - 70 புள்ளிகள்
5 - ஹரியானா ஸ்டீலர்ஸ் - 70 புள்ளிகள்
6 - பாட்னா பைரேட்ஸ் - 69 புள்ளிகள்
7 - பெங்கால் வாரியர்ஸ் - 55 புள்ளிகள்
8 - தமிழ் தலைவாஸ் - 51 புள்ளிகள்
9 - பெங்களுரு புல்ஸ் - 48 புள்ளிகள்
10 - யு மும்பா - 42 புள்ளிகள்
11 - யுபி யுத்தாஸ் - 30 புள்ளிகள்
12 - தெலுகு டைட்டன்ஸ் - 18 புள்ளிகள்

Story first published: Monday, February 19, 2024, 19:42 [IST]
Other articles published on Feb 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+