Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி 2025: தலையில் துண்டை போட்ட தமிழ் தலைவாஸ்.. புள்ளிப் பட்டியலில் படுமோசமான இடம்

சென்னை: 2025 புரோ கபடி லீக் சீசனில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, வெறும் மூன்று போட்டிகளுக்குள் புள்ளிப்பட்டியலில் 11வது இடத்திற்குத் தள்ளப்பட்டு ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி அளித்துள்ளது. இந்த ஆண்டு வெற்றியுடன் பயணத்தைத் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணி, அடுத்தடுத்து சந்தித்த இரண்டு தோல்விகளால் இந்த பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.

செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்ற போட்டிகள் முடிவடைந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள தலைவாஸ், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 5 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், யூ மும்பா மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளால், அணி மேலும் புள்ளிகளைப் பெறத் தவறியது.

Pro Kabaddi League 2025 Points Table Tamil Thalaivas dropped to 11th position

தற்போது, வெறும் 6 புள்ளிகளுடன் 12 அணிகள் கொண்ட பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது தமிழ் தலைவாஸ். முதல் போட்டியில் கிடைத்த வெற்றி மட்டுமே ஆறுதல் அளித்தாலும், அடுத்தடுத்த தோல்விகள் அணியின் 'ப்ளே-ஆஃப்' கனவை ஆரம்பத்திலேயே கேள்விக்குறியாக்கியுள்ளது. மேலும், அணியின் ஸ்கோர் வித்தியாசம் (-9) ஆக இருப்பது, தமிழ் தலைவாஸ் அணி களத்தில் மோசமான சரிவைச் சந்தித்துள்ளது என்பதையும் காட்டுகிறது.

புரோ கபடி 2025 புள்ளிப்பட்டியல் (செப்டம்பர் 8 முடிவில்):

1 - தபாங் டெல்லி - 3 போட்டி - 3 வெற்றி - 0 தோல்வி - 16 புள்ளி - +25 புள்ளி வித்தியாசம்
2 - பெங்கால் வாரியர்ஸ் - 3 போட்டி - 3 வெற்றி - 0 தோல்வி - 15 புள்ளி - +21 புள்ளி வித்தியாசம்
3 - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 3 போட்டி - 2 வெற்றி - 1 தோல்வி - 12 புள்ளி - +15 புள்ளி வித்தியாசம்
4 - புனேரி பல்டன் - 3 போட்டி - 2 வெற்றி - 1 தோல்வி - 11 புள்ளி - +10 புள்ளி வித்தியாசம்
5 - யூ மும்பா - 3 போட்டி - 2 வெற்றி - 1 தோல்வி - 11 புள்ளி - +5 புள்ளி வித்தியாசம்
6 - குஜராத் ஜெயண்ட்ஸ் - 3 போட்டி - 2 வெற்றி - 1 தோல்வி - 10 புள்ளி - +3 புள்ளி வித்தியாசம்
7 - ஹரியானா ஸ்டீலர்ஸ் - 3 போட்டி - 1 வெற்றி - 2 தோல்வி - 8 புள்ளி - -5 புள்ளி வித்தியாசம்
8 - பாட்னா பைரேட்ஸ் - 3 போட்டி - 1 வெற்றி - 2 தோல்வி - 7 புள்ளி - -8 புள்ளி வித்தியாசம்
9 - பெங்களூரு புல்ஸ் - 3 போட்டி - 1 வெற்றி - 2 தோல்வி - 7 புள்ளி - -10 புள்ளி வித்தியாசம்
10 - யுபி யோதாஸ் - 3 போட்டி - 1 வெற்றி - 2 தோல்வி - 6 புள்ளி - -12 புள்ளி வித்தியாசம்
11 - தமிழ் தலைவாஸ் - 3 போட்டி - 1 வெற்றி - 2 தோல்வி - 6 புள்ளி - -9 புள்ளி வித்தியாசம்
12 - தெலுங்கு டைட்டன்ஸ் - 3 போட்டி - 0 வெற்றி - 3 தோல்வி - 1 புள்ளி - -35 புள்ளி வித்தியாசம்

Story first published: Tuesday, September 9, 2025, 13:00 [IST]
Other articles published on Sep 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+