Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2025: புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியின் முழு அட்டவணை.. சென்னையில் போட்டி எப்போது?

சென்னை: புரோ கபடி தொடரின் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12 அணிகள் மோதும் இந்த தொடரின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணிகளும் 18 போட்டியில் விளையாடுகிறது.

லீக் சுற்றில் மொத்தம் 108 போட்டிகளும் பிளே இன் சுற்றில் இரண்டு போட்டிகளும், பிளே ஆப் சுற்றில் இறுதி போட்டி உட்பட 7 போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி மோதும் அட்டவணையை தற்போது பார்க்கலாம்.

Pro Kabaddi League 2025

ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் விசாகப்பட்டினத்தில் மோதுகிறது. இதுபோன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணியுடன் விசாகப்பட்டினத்தில் பல பரிட்சை நடத்துகின்றது. இதே போன்று செப்டம்பர் 6ஆம் தேதி தங்களுடைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் குஜராத் அணியுடன் பல பரிட்சை நடத்துகின்றது.

செப்டம்பர் 12ஆம் தேதி தங்களுடைய நான்காவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ஜெய்பூரில் நடைபெறுகின்றது. அதேபோன்று செப்டம்பர் 16ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய ஐந்தாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் புல்ஸ் அணியுடன் ஜெய்ப்பூரில் பலப்பரிட்சை நடத்துகின்றன. செப்டம்பர் 19ஆம் தேதி தங்களுடைய ஆறாவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணி உடன் மோதுகின்றது.

செப்டம்பர் 20ஆம் தேதி தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய ஏழாவது லீக் ஆட்டத்தில் ஹரியானா அணியுடன் மோதுகிறது. தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய எட்டாவது லீக் ஆட்டத்தில் செப்டம்பர் 22ஆம் தேதி உத்தரப்பிரதேச அணியுடனும், செப்டம்பர் 27ஆம் தேதி ஜெய்ப்பூர் அணியுடனும் மோதுகிறது. அக்டோபர் ஒன்றாம் தேதி தங்களுடைய பத்தாவது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி மும்பையுடன் மோதுகிறது.

இந்த போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அக்டோபர் மூன்றாம் தேதி தங்களுடைய 11-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி ஹரியானாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னையில் நடைபெறும். அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னையில் பெங்களூர் அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ் அணி, அக்டோபர் ஏழாம் தேதி பாட்னா அணியையும்,அக்டோபர் 11ஆம் தேதி புனே அணியையும் சென்னையில் எதிர்கொள்கிறது.

இதனை தொடர்ந்து டெல்லிக்கு செல்லும் தமிழ் தலைவாஸ் அணி அக்டோபர் 14ஆம் தேதி உத்தரப்பிரதேச அணியையும், அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அணியையும், அக்டோபர் 17ஆம் தேதி டெல்லி அணியும் எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தை பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் அக்டோபர் 21ஆம் தேதி டெல்லியில் விளையாடுகிறது.

Story first published: Saturday, August 23, 2025, 22:49 [IST]
Other articles published on Aug 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+