மோனுதான் டாப்
புரோ கபடி லீக் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இதில் மோனு கோயத்தை மிகவும் அதிகபட்சமாக ரூ.1.51 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ராகுல் சவுத்ரியை தெலுகு டைடன்ஸ் அணி ரூ.1.28 கோடிக்கும், நிதின் தோமரை புனேரி பல்தான் அணி ரூ.1.15 கோடிக்கும் ஏலம் எடுத்தன.

கோடியில் ஏலம்
புனேரி பல்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஹூடாவை பட்னா பைரேட்ஸ் அணி ரூ.1.15 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரிஷாங்க் தேவாடிகாவை, ரூ.1.11 கோடிக்கு யுபி யோத்தா அணி தக்க வைத்தது.

முதல் வீரர்
ஈரானைச் சேர்ந்த பசல் அட்ராசலிதான் புரோ கபடி லீக்கில் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட முதல் வீரராவார். சிறந்த தடுப்பாட்டக்காரரான அவருக்கு ரூ.20 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. யு மும்பா அணி ரூ.1 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது.

ஏலம் முடிந்தது
இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஏலம் நடந்து முடிந்தது. இதில், இதில் பிரஷாந்த் குமார் ராய் அதிகபட்சமாக ரூ.79 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அவரை யுபி யோத்தா அணி ஏலம் எடுத்தது. அவருக்கு அடுத்தபடியாக சந்திரன் ரஞ்சித், ரூ.61.25 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











