Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புனேரி பல்தான், பாட்னா பைரேட்ஸ் வெற்றி.. மைனஸ் 50 புள்ளிகள் பெற்ற ஹரியானா ஸ்டீலர்ஸ்

சோனிபட் : ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் இரண்டாம் கட்ட புரோ கபடி லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 43-37 என யுபி யுத்தா அணியை வீழ்த்தியது. பாட்னா அணியின் பர்தீப் நார்வால் 14 புள்ளிகள் பெற்றார். அவரை விட போட்டியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது பாட்னா அணியின் தடுப்பாட்டம் தான்.

Pro Kabaddi League PKL 2018 - Patna Pirates beat UP Yoddha, Puneri Paltan beat Haryana

யுபி யுத்தா அணியின் ஸ்ரீகாந்த் ஜாதவ் 17, ரிஷன்க் தேவடிகா 11 புள்ளிகள் பெற்று ரெய்டுகளில் ஆதிக்கம் செலுத்தியும் அந்த அணி தோல்வி அடைந்தது.

நேற்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி 45-27 என எளிதாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

நேற்று முன்தினம், யு மும்பா அணியிடம் 27 புள்ளிகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த ஹரியானா அணி, நேற்று 18 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தன் புள்ளிகள் வித்தியாசத்தை "மைனஸ் 50" ஆக பரிதாபமாக உயர்த்திக் கொண்டது.

இன்று புரோ கபடி லீகில் எந்த போட்டியும் நடைபெறாது. நாளை மீண்டும் லீக் போட்டிகள் நடைபெறும். நாளை நடக்கும் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுகு டைடன்ஸ் அணி முதல் போட்டியிலும், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இரண்டாவது போட்டியிலும் மோதுகின்றன.

Story first published: Monday, October 15, 2018, 10:43 [IST]
Other articles published on Oct 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+