Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக்.. இறுதி சுற்றில் பாட்னா,டெல்லி இன்று மோதல்.. வெற்றி வாயப்ப்பு யாருக்கு?

பெங்களூரு: கபடி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த புரோ கபடி லீக் தொடரின் 8வது சீசன் இன்று நிறைவடைகிறது.

இறுதிப் போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணியும், டெல்லி டாபங் அணியும் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.

பாட்னா அணி 4வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. ஆனால் டெல்லியை வீழ்த்துவதும் அவ்வளவு எளிதல்ல.

பாட்னா பலம்

பாட்னா பலம்

லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் பாட்னா அணி முதலிடத்தை பிடித்தது. 16 போட்டியில் வென்ற பாட்னா அணி, புரோ லீக் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. பாட்னா அணியின் பலமாக Defence பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு அதிகம்

வாய்ப்பு அதிகம்

ரைட் வரும் எதிரணி வீரர்களை பிடிப்பதில் வல்லவர்களான பாட்னா அணி Tackle புள்ளிகள் அடிப்படையில் நடப்பு சீசனில் 2வது அணியாக உள்ளது. பாட்னா அணியின் பலமான முகமதெரிசா இருப்பார். இதுவரை 10 முறை High 5 புள்ளிகளை பெற்று அவர் அசத்தியுள்ளார். பாட்னா அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

டெல்லிக்கு சாதகம்

டெல்லிக்கு சாதகம்

எனினும் நடப்பு சீசனில் டெல்லியுடன் மோதிய 2 லீக் போட்டியிலும் பாட்னா அணி தோல்வியை தழுவியுள்ளது. டெல்லி அணியின் நவீன் ஃபார்ம்க்கு திரும்பியது டெல்லி அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. அரையிறுதியில் அந்த அணி 11 Tackle புள்ளிகளை பெற்றதே அதன் பலத்தை பரைச்சாற்றும்.

எந்த சேனல்?

எந்த சேனல்?

டெல்லி அணி லீக் சுற்றில் பாட்னாவை 2 முறை வீழ்த்திய உத்வேகத்தில் இருந்தாலும், 3 முறை சாம்பியனான பாட்னாவை வீழ்த்த அவர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். முதடல முறையாக சாம்பியன் பட்டத்தை டெல்லி வெல்லுமா இல்லை பாட்னா 4வது முறையாக கோப்பை வென்று சாதனை படைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2 மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேரில் காணலாம்.

Story first published: Friday, February 25, 2022, 12:42 [IST]
Other articles published on Feb 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+