Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி அரையிறுதி சுற்று.. தமிழ் தலைவாஸ் போராடி தோல்வி.. ரசிகர்கள் மனதை வென்றனர்

மும்பை : புரோ கபடி லீக் தொடர் 9வது சீசன் அரையிறுதி சுற்றில் தமிழ் தலைவாஸ் அணி, தோல்வியை தழுவியது.

கடந்த 9 சீசன்களில் தமிழ் தலைவாஸ் அணி, முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் தமிழக ரசிகர்கள், தமிழ் தலைவாஸ் அணி பைனலுக்கு செல்லும் என எதிர்பார்த்தனர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழ் தலைவாஸ் அணி முதலில் ரைடு சென்றது.

ஆதிக்கம்

ஆதிக்கம்

தொடக்கம் முதலே இரு அணிகளும் ஆக்கோரஷமாக செயல்பட்டனர். தமிழ் தலைவாஸ் அணி முதலில் புள்ளிகளை குவித்து, முன்னிலை பெற்றத. எனினும் சில தவறுகள் செய்ததன் காரணமாக புனே அணிகளும் புள்ளிகளை பெற்று பதிலடி தந்தது. எனினும் சுதாரித்து கொண்ட விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது.

பதிலடி

பதிலடி

முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 21க்கு15 என்ற புள்ளிகள் பெற்று 6 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. எனினும் இரண்டாவது பாதியில் அதிரடிய காட்டிய புனே அணி, தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் ஆக்கியது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜிங்யா பவார் புள்ளிகளை பெற்றார்.

சமன்

சமன்

ஒரு கட்டத்தில் 2 அணிகளும் 30 க்கு30 என்ற சமனில் இருந்தது. இதனால் போட்டியில் யா வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு தொற்றி கொண்டது. இதனையடுத்து ரெய்ட் சென்ற தமிழ் தலைவாஸ் கேப்டன் அஜிங்யாவை கொத்தாக புனே வீரர்கள் தூக்கினர். இதன் பின்னர் பங்கஜ் 2 புள்ளிகளை புனேக்கு ரைட் சென்று பெற்று தந்தார்.

தமிழ் தலைவாஸ் தோல்வி

தமிழ் தலைவாஸ் தோல்வி

கடைசி நிமிடத்தில் தமிழ் தலைவாஸ் செய்த தவறை பயன்படுத்தி கொண்டு புனே அணி முன்னிலை பெற்றது. எனினும் ஆட்டத்தை சமன் செய்ய தமிழ் தலைவாஸ் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதன் முலம் தமிழ் தலைவாஸ் அணி 39க்கு 37 என 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அரையிறுதி வரை வந்த தமிது தலைவாஸ் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இறுதி ஆட்டத்தில் புனே அணியும், ஜெய்ப்பூர் அணியும் மோத உள்ளது.

Story first published: Thursday, December 15, 2022, 23:13 [IST]
Other articles published on Dec 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+