Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Pro Kabaddi 2019: தெலுகு டைட்னசை துவம்சம் செய்த யு மும்பா.. பாட்னாவை புரட்டியெடுத்த பெங்களூரு

ஹைதராபாத்: புரோ கபடி தொடரில் முதல் ஆட்டத்தில், யு மும்பா அணியும், மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை பெங்களூரு புல்ஸ் அணியும் வீழ்த்தின.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது புரோ கபடி தொடரின் 7வது சீசன், ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதியுடன் தொடர் முடிகிறது.

2014ம் ஆண்டு முதல் தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில், தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், பெங்கால் வாரியர்ஸ், பெங்களூர் புல்ஸ் என 12 அணிகள் மோதுகின்றன.

12 இடங்களில் போட்டிகள்

12 இடங்களில் போட்டிகள்

மும்பை, பாட்னா, அகமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா என 12 இடங்களில் போட்டிகள் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற 11 அணிகளுடன் தலா 2 போட்டியில் மோதும்.

2 அணிகள் அரையிறுதி

2 அணிகள் அரையிறுதி

லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். மீதமுள்ள 2 அணிகளை எலிமினேட்டர் சுற்று மூலம் முடிவு செய்யப்படும்.

யு மும்பா வெற்றி

யு மும்பா வெற்றி

அதன்படி, முதல் போட்டியில் தெலுகு டைடன்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதின. ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. அதில், யு மும்பா அணி 31 - 25 என்ற புள்ளி கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

 பெங்களூரு புல்ஸ் வென்றது

பெங்களூரு புல்ஸ் வென்றது

மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சும், பாட்னா பைரேட்சும் களம் கண்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 34 - 32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்சை தட்டி தூக்கியது. மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சும், பாட்னா பைரேட்சும் களம் கண்டன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி 34 - 32 என்ற புள்ளி கணக்கில் பாட்னா பைரேட்சை தட்டி தூக்கியது.

Story first published: Saturday, July 20, 2019, 23:51 [IST]
Other articles published on Jul 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+