Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 5 நிமிடத்தில் மாறிய வெற்றி .. ஒற்றை ஆளாக மாஸ் காட்டிய திவாங்க்.. தமிழ் தலைவாஸ் தோல்வி!

ஐதராபாத்: பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 42-20 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. கடைசி 5 நிமிடங்களில் ஆக்ரோஷமாக ஆடிய பாட்னா பைரேட்ஸ் அணியின் திவாங்க் அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். அவர் மொத்தமாக 25 புள்ளிகளை பெற்று அசத்தினார்.

11வது சீசனுக்கான புரோ கபடி லீக் தொடரின் 2வது வாரப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பாட்னா பைரேட்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. பாட்னா பைரேட்ஸ் அணியை பொறுத்தவரை இதுவரை 1 போட்டியில் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளது. மறுபக்கம் தமிழ் தலைவாஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும அபார வெற்றியை பெற்று இருக்கிறது.

pro kabaddi pro kabbadi 2024 tamil thalaivas 2024

இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே தமிழ் தலைவாஸ் அணி அதிரடியாக புள்ளிகளை பெறத் தொடங்கியது. ஆட்டத்தின் 8வது நிமிடத்திலேயே பாட்னா பைரேட்ஸ் அணியை ஆல் அவுட் செய்து தமிழ் தலைவாஸ் அசத்தியது. அதேபோல் நட்சத்திர வீரர் சச்சின் ரெய்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நரேந்தர் அதிரடியாக ரெய்டு சென்று புள்ளிகளை குவித்தார்.

இதனால் ஆட்டத்துஇல் 18-9 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் இருந்தது. ஆனால் முதல் பாதியின் கடைசி 5 நிமிடத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியின் அதிரடியான ஆட்டத்தால், தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட்டானது. இருந்தாலும் முதல் பாதி முடிவில் 23-18 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி ஆதிக்கம் செலுத்த, அந்த நேரத்தில் நரேந்திர் சூப்பர் ரெய்டு மூலம் 3 புள்ளிகளை பெற்று அசத்தினார். ஆனால் பாட்னா பைரேட்ஸ் அணியின் திவாங்க் அதிரடியாக புள்ளிகளை பெற்று மிரட்டினார். இதனால் ஆட்டம் 33-31 என்ற நிலைக்கு வந்தது. தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் டிஃபென்சில் செய்த தவறால், பாட்னா பைரேட்ஸ் அணி விரைவாக முன்னேறியது.

இந்த நிலையில் ஆட்டம் முடிவதற்கு 6 நிமிடங்களுக்கு முன்பாக தமிழ் தலைவாஸ் அணி ஆல் அவுட்டாகியது. இதனால் பாட்னா பைரேட்ஸ் அணி 37-36 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து கடைசி ஒரு நிமிட இருக்கும் போது 40-38 என்ற கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி முன்னிலையில் இருந்தது.

கடைசி ரெய்டில் ஒரு புள்ளிகள் எடுத்தால் டிரா செய்ய முடியும் என்ற நிலை வந்த போது, தமிழ் தலைவாஸ் அணியின் நரேந்தரை பாட்னா பைரேட்ஸ் அணி டேக்குள் செய்தது. இதனால் இறுதியாக 42-20 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி த்ரில் வெற்றியை பெற்றது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அடையும் முதல் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 25, 2024, 21:16 [IST]
Other articles published on Oct 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+