Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Pro Kabaddi: 8வது தோல்வி.. ரெய்டில் பாய்ண்ட் எடுங்கப்பா.. மீண்டும் ஹரியானாவிடம் தோற்ற தமிழ் தலைவாஸ்!

நொய்டா: புரோ கபடி லீக் தொடரில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அனி 42-30 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்த சீசனில் 8வது முறையாக தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ், புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புரோ கபடி லீக் தொடரின் 7வது வார லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்த்து தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியது. இந்த சீசனில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய போது, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி கடைசி 4 நிமிடங்களில் 36-29 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

pro kabaddi pro kabbadi 2024 tamil thalaivas sachin 2024

இதனால் இந்த முறை தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்திலேயே ஹரியான ஸ்டீலர்ஸ் அணி விரைவாக புள்ளிகளை எடுத்தது. இதனால் 5-0 என்ற கணக்கில் ஹரியானா முன்னிலை பெற, பின்னர் தமிழ் தலைவாஸ் அணி வேகமாக பின் தொடர்ந்தது. முதல் பாதி ஆட்டம் முடிவில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 13-9 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி அதிரடியாக புள்ளிகளை பெற்றது. 19-14 என்ற புள்ளிக் கணக்கில் இருந்த போது, ஹரியானா அணி ஆல் அவுட் செய்து தமிழ் தலைவாஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதனால் 23-14 என்ற நிலை உருவாகியது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் ரெய்டு-க்கு சென்றவர்களாலும் புள்ளிகளை எடுக்க முடியவில்லை.

தமிழ் தலைவாஸ் அணி கம்பேக் கொடுக்க முயற்சித்தாலும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி குறைந்த 10 புள்ளிகள் இடைவேளையுடன் முன்னேறி சென்று கொண்டே இருந்தது. இறுதியாக ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 42-30 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றியை பெற்றது. இதன் காரணமாக 12 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை சந்தித்தது.

இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி அடையும் 8வது தோல்வி இதுவாகும். இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 15 போட்டிகளில் 12 வெற்றி, 3 தோல்வியுடன் 61 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை 14 போட்டிகளில் 5 வெற்றி, 8 தோல்வி, ஒரு டிராவுடன் 33 புள்ளிகள் பெற்று 9வது இடத்தில் இருக்கிறது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதே சந்தேகம் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Friday, November 29, 2024, 22:39 [IST]
Other articles published on Nov 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+