Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கில்லி விஜய் ரசிகர்கள் எல்லாம் தயாரா? இன்று முதல் வாத்தி ரெய்டு ஆரம்பம்..!!

பெங்களூரு: தலைப்பை பார்த்ததும் இது சினிமா செய்தி என்று நினைக்க வேண்டாம். இது விளையாட்டு செய்தி தான்.

ஆம், கில்லி படம் பார்த்த பிறகு பலரும் கபடி ரசிகர்கள் ஆனார்கள். அவர்களுக்கு விருந்து படைக்க வருகிறது ப்ரோ கபடி லீக் சீசன் 8.

இன்று தொடங்கி வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளாக இந்த தொடர் நடைபெறாமல் இருந்தன

12 அணிகள்

12 அணிகள்

பயோ பபுள் முறையில் நடைபெறும் இந்த தொடர் அனைத்தும் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ்,பெங்களூரு புல்ஸ்,பெங்கால் வாரியர்ஸ்,டாபாங் டெல்லி, குஜராத் ஜெய்ன்ட்ஸ்,பாட்னா பைரட்ஸ்,ஹரியானா ஸ்டிலர்ஸ்,புனே பால்டன், யூ மும்பா,உ.பி. யுத்தா, ஜெய்ப்பூர் பிங்க் பைரட்ஸ் என 12 அணிகள் பங்கேற்கின்றன.

இன்றைய போட்டிகள்

இன்றைய போட்டிகள்

இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பெங்கால் வாரியர்ஸ் அணி களமிறங்குகிறது.முதல் நாள் ஆட்டத்தில் 3 போட்டிகள் நடைபெறுகின்றன.மும்பை, பெங்களூரு அணிகள் முதல் போட்டியிலும், இரண்டாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்,தெலுங்கு டைட்டன்ஸ் அணியும், மூன்றாவது போட்டியில் நடப்பு சாம்பியனான பெங்கால் அணி, உ.பி. அணியுடனும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நட்சத்திர வீரர்கள்

நட்சத்திர வீரர்கள்

இந்த தொடரில் அதிகபட்சமாக பர்தீப் நார்வாலை ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு உ.பி. அணி ஏலத்தில் எடுத்தது.இதன் மூலம் விலை உயர்ந்த கபடி வீரர் என்ற பெருமையை பெற்ற அவர், ரைடுகள் மூலம் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளார்.தீபக் ஹூடா, சித்தார்த் தேசாய்,பவன் செரவாத், நவீன்குமார் ஆகிய நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் களமிறங்குகின்றனர்.

தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணியை பொறுத்தவரை இது வரை ப்ரோ கபடியின் பிளே ஆப்க்கு செல்லவில்லை.இம்முறை அந்த வரலாற்றை மாற்றும் உத்வேகத்துடன் சுர்ஜித் சிங் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி களமிறங்கியுள்ளது. இம்முறை சிறந்த வீரர்களை தேர்வு செய்துள்ளோம்,பயிற்சியாளர் உதயா தலைமையில் சிறப்பான பயிற்சி எடுத்துள்ளதாக கேப்டன் சுர்ஜித் தெரிவித்துள்ளார். ப்ரோ கபடி லீக்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ், மற்றம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் காணலாம். இந்தப் போட்டி 7.30 மணிக்கு தொடங்குகிறது.

Story first published: Wednesday, December 22, 2021, 16:27 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+