Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக்.. !! பாட்னாவை அடிச்சி தூக்கிய தமிழ் தலைவாஸ்.. திக்..திக்.. இறுதி நிமிடங்கள்..

பெங்களூரு: புரோ கபடி லீக் தொடரின் 8வது சீசன் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 36வது லீக் போட்டியில் தமிழக அணியும், பாட்னா அணிகளும் மோதின.

பாட்னா அணி நடப்பு சீசனில் ஒரு தோல்வி, தொடர்ந்து 3 வெற்றி என பெற்று, தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொள்ள தயாராக இருந்தது

இந்த தொடரில் தமிழ் தலைவாஸ அணி இன்னும் ஒரு தோல்வியை கூட அடையவில்லை, இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளன.

கடும் போட்டி

கடும் போட்டி

போட்டி தொடங்கியதும், பாட்னா அணியின் மோனு முதல் புள்ளியை பெற்றார். இதனையடுத்து தமிழக அணி அதுல், பாட்னா வீரரை அவுட்டாக்கி முதல் புள்ளியை பெற்று தந்தார். இதனையடுத்து பாட்னா கேப்டன் பிரசாத் ராய், ரெய்டு செய்து 2 புள்ளிகளை பெற்றார். இதனையடுத்து ரெய்டு வந்த பாட்னா வீரர்கள் இருவரை தமிழ் தலைவாஸ் அணி சிறைபிடிக்க, த்மிழ் தலைவாஸ் ஸ்கோர் 4க்கு3 என்று ஆனது.

ஆல் அவுட்டான தலைவாஸ்

ஆல் அவுட்டான தலைவாஸ்

இதன் பின்னர் சுதாரித்து விளையாடிய பாட்னா வீரர்கள் ரெய்டு செல்லும் போது எல்லாம் ஒவ்வொரு புள்ளிகள் பெற ஸ்கோர் 11-7 என்று ஆனது. இதனைத் தொடர்ந்து பாட்னா வீரர் மோனு, 2 ரெய்டுகளை மேற்கொண்டு தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் ஆக்கினார். இதனால் ஸ்கோர் 18-11 என்ற நிலையில் உயர்ந்தது. இதனால் பாட்னா அணி 7 புள்ளிகள் முன்னிலை பெற்றது.

திருப்பி கொடுத்த தலைவாஸ்

திருப்பி கொடுத்த தலைவாஸ்

இதனையடுத்து ஆட்டத்தின் பிற்பாதியில் ரெய்டு சென்ற தமிழ் தலைவாஸ் அணியின் அஜிங்யா, பாட்னா வீரர்களை கதி கலங்க வைத்தார். பாட்னா அணியின் நட்சத்திர வீரர் மோனுவும் பெஞ்ச்க்கு சென்றார்.தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள், பாட்னாவை ஆல் அவுட் ஆக்கினர்.

சமனில் முடிந்தது

சமனில் முடிந்தது

இதனால் புள்ளிகள் 22க்கு23 என்று ஆனது, தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. இதனையடுத்து, போட்டி பரபரப்பான கட்டத்துக்கு சென்றது. தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் சுர்ஜித் 300 டேக்கிள் புள்ளிகளை பெற்றார். விறுவிறுப்பான இந்தப் போட்டியில் 30க்கு30 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி பெறும் 4வது டிரா இதுவாகும். தற்போது 8 புள்ளிகளுடன் தமிழ் தலைவாஸ் அணி 4வது இடத்தில் உள்ளது.

Story first published: Thursday, January 6, 2022, 22:45 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+