மதுரையில் பெண்கள் ஆசிய கபடி போட்டி
மதுரை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ஆசிய அளவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் ரேஸ்கோர்ஸ் திடலில் வரும் 18ம் தேதி ஆசிய அலவிலான கபடி போட்டி நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த போட்டிகள் மாலை நேரத்தில் நடைபெறுகின்றன.
இந்த போட்டியில் இந்தியா, ஜப்பான், நேபாளம், மலேசியா, இந்தோனேசியா, கொரியா, தாய்லாந்து, ஈரான் உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீராங்களைகள் கலந்து கொள்கின்றனர். ஆசிய அளவிலான போட்டியில் 10 நாடுகள் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.75,000, மூன்று மற்றும் நான்காவது பரிசாக தலா ரூ.50,000 வழங்கப்படுகிறது. போட்டியை பார்வையாளர்கள் இலவசமாக காணலாம்.
இதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட கபடி கழக தலைவரும், துணை மேயருமான மன்னன், செயலாளர் சோலை ராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications