For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாத்மா காந்திக்கு ஜே! அப்பாடா இன்று போட்டி கிடையாது.. மகிழ்ச்சியில் தமிழ் தலைவாஸ்!

By Staff

சென்னை: யு மும்பா அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் கடும் சவால் கொடுத்தாலும், கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது தமிழ் தலைவாஸ் அணி. ஆனாலும், பி பிரிவில் புள்ளிப் பட்டியில் ஒருபடி முன்னேறி ஆறுதல் தேடியுள்ளது.

புரோ கபடி லீக் 5வது சீசன் போட்டியின் 105 ஆட்டம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று இரவு நடந்தது. இதில் யு மும்பா அணியுடன், உள்ளூர் அணியான தமிழ் தலைவாஸ் மோதியது.

Tamil Talaivas does it again


இதுவரை விளையாடிய, 15 போட்டிகளில் 4ல் வெற்றி, 2 டை செய்துள்ள தமிழ் தலைவாஸ் அணி, 9 போட்டிகளில் வெற்றியின் பக்கத்துக்கு ரெய்டு செய்துவிட்டு, அதை தொட முடியாமல் திருப்பியுள்ளது.

தபாங்க் டில்லிக்கு அடுத்ததாக, உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறாத அணியாக மாறும் நிலைக்கு தமிழ் தலைவாஸ் உருவாகியுள்ளது.

தற்போதைய நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது தமிழ் தலைவாஸ் அணிக்கு எட்டாக் கனியாகும். குறைந்தபட்சம், பி பிரிவில் கடைசி இடத்தைப் பிடிக்காமல் இருப்பதற்கு முயற்சிக்கலாம்.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில், துவக்கத்தில் இருந்து, கடைசி வரை, யு மும்பாவின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி கடும் சவால் கொடுத்தது. அவ்வப்போது, புள்ளிக் கணக்கை சமன் செய்து, யு மும்பா அணியின் பிபியை எகிற வைத்தது.

முதல் பாதியின் இறுதியில், யு மும்பா 18-17 என முன்னிலை பெற்றிருந்தது. புள்ளிகளை சேகரித்து பல முறை சமநிலையை தமிழ் தலைவாஸ் உருவாக்கியது.

ஆட்டம் கிட்டத்தட்ட முடிவடையும் நேரத்தில் 26-22 என்ற நிலையில் இருந்து, 26-26 என சமநிலையை தமிழ் தலைவாஸ் உருவாக்கியது. ஆனால், தொடர்ந்து புள்ளிகளை எடுத்து, 33-30 என்ற கணக்கில் யு மும்பா வென்றது.

மிக நெருக்கமாக தோல்வியடைந்ததால், புள்ளிக்கணக்கில் பி பிரிவில், இதுவரை கடைசி இடத்தில் இருந்த தமிழ் தலைவாஸ் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்றிரவு நடந்த மற்றொரு பரபரப்பான ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ் அணி 32-31 என்ற கணக்கில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வென்றது.

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் என்பதால், இன்று எந்தப் போட்டியும் கிடையாது. நாளை நடக்கும் போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் சந்திக்கிறது.
Story first published: Monday, October 2, 2017, 13:33 [IST]
Other articles published on Oct 2, 2017
English summary
Tamil Thalaivas continues its miserable form in the Pro Kabaddi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X