Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாம்பியன்னா பயந்துருவோமா? தெறிக்கவிட்ட தமிழ் தலைவாஸ்.. கண்டு மகிழ்ந்த விஜய் சேதுபதி

Recommended Video

தமிழ் தலைவாஸ் நேற்று வெற்றி,,இன்று?

சென்னை : சென்னையில் நேற்று ஆறாவது புரோ கபடி லீக் தொடர் துவங்கியது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியும், சென்ற சீசனின் சாம்பியன் அணியான பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

மற்றொரு போட்டியாக யு மும்பா, புனேரி பல்தான் மோதல் நடைபெற்றது. அந்த போட்டி டையில் முடிந்து பரபரப்பை கூட்டியது.

பாட்னா பைரேட்ஸ் அணி சாம்பியன் அணி என்பதால், தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று விடுமா என்ற எதிர்பார்ப்போடு போட்டி துவங்கியது.

சாம்பியன் அணின்னா எங்களுக்கென்ன?

சாம்பியன் அணின்னா எங்களுக்கென்ன?

துவக்கத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையில் இருந்தது. கேப்டன் அஜய் தாக்குர் 14 புள்ளிகள் எடுத்து கலக்கினார். சாம்பியன் அணியா இருந்தா எங்களுக்கென்ன? என்பது போல பாட்னா பைரேட்ஸ் அணியை புரட்டி எடுத்த தமிழ் தலைவாஸ் அணி 42-26 என எளிதாக பெரிய வெற்றியை பதிவு செய்தது.

கோட்டை விட்ட பாட்னா

கோட்டை விட்ட பாட்னா

பாட்னா அணி தடுப்பதில் தான் கோட்டை விட்டது. சென்னை அணியின் நட்சத்திர வீரராக கேப்டன் அஜய் தாக்குர் இருக்கிறார். மிகச் சிறந்த ரெய்டரான அவர் நேற்றும் தன் திறமையை நிரூபித்தார்.

விஜய் சேதுபதி வந்தார்

விஜய் சேதுபதி வந்தார்

இந்த போட்டியைக் காண ஸ்ருதிஹாசன் வந்திருந்தார். தமிழ் தலைவாஸ் அணியின் இந்த ஆண்டு சிறப்பு தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் விஜய் சேதுபதியும் போட்டியைக் காண வந்திருந்தார்.

டையில் முடிந்த ஆட்டம்

டையில் முடிந்த ஆட்டம்

யு மும்பா, புனேரி பல்தான் போட்டியில் இறுதி வரை இரண்டு அணிகளும் சளைக்காமல் புள்ளிகளை பெற்று வந்தன. கடைசி இரண்டு நிமிடங்கள் இருக்கையில் யு மும்பா அணி 31-29 என முன்னிலையில் இருந்தது. அடுத்த நிமிடத்தில், அந்த அணி 32-30 என முன்னிலையில் இருந்தது. எனினும், கடைசி நொடிகளில் புனேரி பல்தான் அணி இரண்டு புள்ளிகள் பெற்று 32-32 என போட்டியை டை செய்து அதிர்ச்சி அளித்தது.

Story first published: Thursday, October 18, 2018, 11:59 [IST]
Other articles published on Oct 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+