டெல்லிக்கு துணை நிற்கும் தமிழ்நாடு
சென்னை: தலைப்பை பார்த்ததும் இது அரசியல் செய்தி என்று நினைத்து விட வேண்டாம். புரோ கபடி லீக் போட்டியில், தமிழ் தலைவாஸ் அணியின் நிலை இதுதான்.
புரோ கபடி லீக் 5வது சீசனில், கடைசி நேரத்தில் சொதப்பும் அணி என்ற சிறப்பை (?!) பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி, நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் யுபி யோத்தா அணியுடன் மோதியது. இதில் 37-33 என்ற கணக்கில் யுபி யோத்தா வென்றது.

முதல் பாதியில் சிறிது நேரம் கடும் சவால் விட்டது தமிழ் தலைவாஸ். ஆஹா, அணியின் தூதர் கமலிடம் வெற்றி ரகசியத்தை கற்றுக் கொண்டு விட்டதோ என்று நினைத்த நேரத்தில், என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா' என்ற வடிவேலு கணக்கில், யுபி யோத்தா கொடுத்த அடியை வாங்கிக் கொண்டது. முதல் பாதியில், 20-15 என யுபி யோத்தா முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் கேப்டன் அஜய் தாக்குர், பிரபஞ்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும், கடைசி நேர ஜூரத்தில் இருந்து இன்னும் மீளாத தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்தது.
சென்னையில் தான் விளையாடிய 5 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது. இன்று நடக்க உள்ள கடைசி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி என்ற பெருமையை தபாங்க் டெல்லி அணி பெற்றுள்ளது. அதற்கு துணை சேரும் அனைத்து வாய்ப்பும் தமிழ் தலைவாஸ் அணிக்கு உள்ளது.
Story first published: Thursday, October 5, 2017, 14:49 [IST]
Other articles published on Oct 5, 2017


Click it and Unblock the Notifications