Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வந்தாரை வாழ வைத்த தமிழ் தலைவாஸ்

சென்னை: கடைசி நேர பரபரப்பில் சொதப்பும் அணி என்று பெயரெடுத்துள்ள தமிழ் தலைவாஸ் அணி, நேற்று நடந்த தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் துவக்கத்தில் இருந்தே சொதப்பி, மிகப் பெரிய புள்ளிக் கணக்கில் தோல்வியை சந்தித்தது.

புரோ கபடி லீக் 5வது சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டத்தில் மிகவும் மோசமான தோல்வியை, தமிழ் தலைவாஸ் அணி நேற்று பெற்றது.

Tamil Thalaivas record loss


சென்னையில் நேற்று இரவு கனமழை அடித்து துவைத்தது. அதற்கு முன்பாக, நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த ஆட்டத்தில், தெலுகு டைட்டன்ஸ் அணி, கருணையே இல்லாமல், தமிழ் தலைவாஸ் அணியை அடித்து துவைத்து காயப்போட்டு இஸ்திரியும் செய்து விட்டது.

இந்த சீசனில் இதுவரை, யு மும்பா அணி மட்டுமே அதிகபட்சமாக 51

புள்ளிகள் எடுத்துள்ளது. அதையும் தாண்டி, 58 புள்ளிகள் எடுத்து புதிய சாதனையை தெலுகு டைட்டன்ஸ் அணி புரிந்துள்ளது. 58-37 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முதல் பாதியின் இறுதியில் தெலுகு டைட்டன்ஸ் 30-15 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்குர் கடுமையாக போராடினார். அவர் 20 புள்ளிகளை பெற்றார். இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் 22 புள்ளிகள் பெற்றன. அதே நேரத்தில், தெலுகு டைட்டன்ஸ் 28 புள்ளிகளைப் பெற்றது. மிகவும் சுலபமாக தெலுகு டைட்டன்ஸ் அணி வென்றது.

பி பிரிவில் உள்ள தெலுகு டைட்டன்ஸ் அணி, 20 போட்டிகளில் 7ல் வெற்றி, 11ல் தோல்வியுடன் 48 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணி மேலும் 2 ஆட்டங்களில் ஆட உள்ளது.

அதே நேரத்தில் தமிழ் தலைவாஸ், 17 போட்டிகளில், 4ல் வெற்றி, 11ல் தோல்வியுடன் 34 புள்ளிகளைப் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் இன்னும், 5 போட்டிகளில் விளையாட உள்ளது.

இதன் மூலம், உள்ளூரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் தோல்வியடைந்துள்ளது.

நேற்று இரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்சூன்ஜயன்ட்ஸ் அணி 42-22 என்ற கணக்கில் தபாங் டில்லி அணியை வென்றது.

இன்று நடக்கும் ஆட்டங்களில் யு மும்பா - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளும், தமிழ் தலைவாஸ், யுபி யோத்தா அணியையும் சந்திக்க உள்ளன.

Story first published: Wednesday, October 4, 2017, 12:13 [IST]
Other articles published on Oct 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+