Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புரோ கபடி லீக் சீசன் 6.... தமிழ் தலைவாஸ் அணியில் யார் யார் உள்ளனர் தெரியுமா!

Recommended Video

புரோ கபடி லீக்கின் அடுத்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் தொடங்கியது- வீடியோ

மும்பை: புரோ கபடி லீக் சீசன் 6ல் விளையாட உள்ள தமிழ் தலைவாஸ் அணியில் 19 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல் போட, கபடியை ஊக்குவிக்க புரோ கபடி லீக் போட்டிகள் நடக்கின்றன. இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. புரோ கபடி லீக் 6வது சீசன் இந்தாண்டு அக்டோபர் 19ல் துவங்குகிறது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் மும்பையில் நேற்றும் இன்றும் நடந்தது.

Tamil thalaivas team for the pro kabaddi league season 6

கடந்த சீசனில் அறிமுகமான முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணி, கேப்டன் அஜய் தாக்குர், அமித் ஹூடா, சி அருண், டி பிரதீப் ஆகிய நான்கு வீரர்களை தக்க வைத்துள்ளது.

இரண்டு நாட்கள் நடந்த ஏலத்தில் மேலும் 15 பேரை தேர்வு செய்துள்ளது. இதில் சுகேஷ் ஹெக்டே, ஜே.தர்ஷன் ஆகியோரை தலா ரூ.28 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. கொரியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் அணியில் உள்ளனர்.

தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள்:

அஜய் தாக்குர் (கேப்டன்), அமித் ஹூடா, சி. அருண், டி. பிரதீப் ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். தர்ஷன் தேவாங்க், சான் சிக் பார்க், அனில் குமார் ஆகியோர் ஏலத்தில் தக்க வைக்கப்பட்டனர்.

தெலுகு டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய சுகேஷ் ஹெக்டே, எம்.எஸ். அதுல், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியின் மஞ்சித் சில்லார், ஜே மின் லீ, ஜஸ்விர் சிங், தபாங்க் டெல்லியின் சுனில் குமார், டி. கோபு, ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் சுர்ஜித் சிங் ஆகியோரை தமிழ் தலைவாஸ் ஏலம் எடுத்தது.

இதைத் தவிர ஜெயசீலன், விமல் ராஜ், அபிநந்தன் சந்தல், ரஜ்னீஷ் ஆகியோர் முதல் முறையாக களமிறங்க உள்ளனர்.

Story first published: Friday, June 1, 2018, 16:26 [IST]
Other articles published on Jun 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+