Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2021: புதிதாக 7 வீரர்கள் அறிமுகம்.. இந்த முறை ஒரு முடிவோடு களமிறங்கும் தமிழ் தலைவாஸ்

சென்னை: கடந்த 7 சீசன்களாக சூப்பர் ஹிட்டடித்த புரோ கபடி லீக் தொடர் தற்போது 8வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கிறது.

இந்தியாவில் ஐ.பி.எல்-க்கு அடுத்தபடியாக ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் விளையாட்டுத் தொடர் என்றால் அது புரோ கபடி லீக் தொடர் தான்.

இம்முறையும் வழக்கம் போல், தமிழ் தலைவாஸ் முதல் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வரை மொத்தம் 450 வீரர்களுடன் 12 அணிகள் களமிறங்க காத்திருக்கின்றன.

 தேதி அறிவிப்பதில் சிக்கல்

தேதி அறிவிப்பதில் சிக்கல்

இந்த நிலையில், தற்போது 8வது புரோ கபடி லீக் தொடர் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைபெற திட்டமிட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 12 அணிகள் மோதிக்கொள்ளும் இந்த தொடரில் 161 வீரர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். மொத்தம் 59 வீரர்கள் தங்களுடைய அணிகளால் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் 8வது புரோ கபடி லீக் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. அதற்கு முன்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அபிஷேக் பச்சன், பிரணவ் அதானி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய பிரணவ் அதானி, "கொரோனா பெருந்தொற்று காரணமாக, 8வது புரோ கபடி சீசன் எப்போது தொடங்கும் என்ற தேதியை அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், இப்போது அதனை அறிவிக்க இயலாது. எனினும், கூடிய விரைவில் தேதியை அறிவிப்போம், அரசாங்கம் விதித்துள்ள கொரோனா விதிகளுக்கு உட்பட்டு டிசம்பர் மாதத்திற்குள் போட்டிகள் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

 தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.6 லட்சம் வீதம் வீரர்களின் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் ரூ.4.4 கோடி செலவு செய்யலாம். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்கள் இடம் பெற அனுமதிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் தமிழ் தலைவாஸ் அணி நட்சத்திர வீரர்களை களமிறக்கியுள்ளது. குறிப்பாக இளம் ரைடர்கள் மீது அதிக தொகையை தமிழ் தலைவாஸ் அணி முதலீடு செய்துள்ளது. ஏலத்தின் போது, துவக்க நேரத்தில் சைலண்ட் மோடில் இருந்த தமிழ் தலைவாஸ் அணி, 7 புதிய வீரர்களை வாங்கி அதிரடி காட்டியது. இதில் பி பிரிவு ரைடர் எம்எஸ் அதுலை ரூ .30 லட்சத்திற்கு வாங்கியது.

 ஆல்-ரவுண்டர்

ஆல்-ரவுண்டர்

கேரளாவைச் சேர்ந்த அதுல், ஏலப் பட்டியலில் பி பிரிவு ரைடராக இருந்தார். இவர் முன்பு லீக்கின் ஆறாவது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த ஏலத்தில் சி பிரிவு ரைடர் அஜிங்க்யா பவார் ரூ .19.5 லட்சத்திற்கும், சி பிரிவு ஆல்-ரவுண்டர் சவுரப் பாட்டீல் ரூ .15 லட்சத்திற்கும் தமிழ் தலைவாஸ் அணியில் வாங்கப்பட்டனர். தவிர, அந்த அணி மேலும் நான்கு வீரர்களை 10 லட்சம் கொடுத்து வாங்கியது. சாதப்பன்செல்வம் ( சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாகர் கிருஷ்ணா (சி பிரிவு ஆல்-ரவுண்டர்), சாஹில் (சி பிரிவு டிபெண்டர்), மற்றும் பவானி ராஜ்புத் (சி பிரிவு ரைடர்) ஆகியோர் இதில் அடக்கம்.

 பிரபஞ்சன் 71 லட்சம்

பிரபஞ்சன் 71 லட்சம்

தமிழ் தலைவாஸ் அணி ஏற்கனவே ரூ. 2.38 கோடி செலவில் 3 இளம் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. அவர்களில் மன்ஜீத் மற்றும் பிரபஞ்சன் முறையே ரூ .92 லட்சம் மற்றும் ரூ .71 லட்சங்களுக்கு வாங்கப்பட்டனர். அதே நேரத்தில் அனுபவ வீரரான சுஜ்ரீத் சிங்கை டிஃபன்ஸுக்காக ரூ.75 லட்சத்திற்கு தமிழ் தலைவாஸ் வாங்கியுள்ளது. முகமது துஹின், சஹில் ஆகியோர் டிஃபன்ஸுக்காக ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் பிரிவில் நாம் முன்பே சொன்னது போல், சவுரப் பாட்டீல் ரூ.15 லட்சம், அன்வர் சஹீத் பாபா ரூ.10 லட்சம், சாகர் ரூ.10 லட்சம் மற்றும் சாதப்பன்செல்வம் ரூ.10 லட்சம் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். டிஃபண்டர்களான ஹிமான்ஷு, அபிஷேக், சாகர் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

Story first published: Wednesday, September 1, 2021, 21:48 [IST]
Other articles published on Sep 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+